டார்வின் தவளை அழிவுக்கு காரணம் என்ன?

இவ்வுலகில் நீர் நில வாழ் (amphibians )உயிரினங்கள் தோன்றி 365 மில்லியன் வருடங்கள் ஆகின்றன அதாவது சடையானை போன்ற விலங்குகள் உருவாவதற்கு முன்பே.

இயற்கை மீது அதீத பற்று கொண்ட டார்வினின் பல ஆண்டுகால உழைப்பு. பீகிள் எனும் கப்பலில் அவர் மேற்கொண்ட கடற்பயணம்(1830)  தென் அமெரிக்க கடற்கரை, பகாஸ் தீவுகள், சாஹீதி,ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, டாஸ்மானியா, மால்டிவ், மொரீசியஸ், செயின் ஹலினா, கேப்வொ தீவுகள், அஸோரஸ், அவரை வியக்க வைத்தது. திரும்ப வரும்போது அவரது பெட்டகத்தில் நிறைய உயிரினங்கள் நிரம்பியிருந்தது. இவற்றை வைத்து பல ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவே பரிணாம தத்துவம்.

டார்வின் ஆராய்சியில் முக்கிய இடம் பெற்றது ஒரு தவளை அதற்கு அவரின் பெயர் இடப்பட்டது “Northern Darwin’s frog ” மற்ற தவளைகளை போல் இல்லாமல் வித்தியாசமானது இந்த தவளை. இதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அது இப்போது முற்றிலும் அழிந்து விட்டதாக நம்பப் படுகிறது.(extinct species !)

img_darwin-frog-extinct
இது பற்றி பி.பி.சியில் வெளியான தகவல் :

புகழ் பெற்ற பிரிட்டிஷ் தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் பெயரிடப்பட்ட ஒரு தவளையினம் அழிந்தொழிந்து போய்விட்டது என்று சிலி மற்றும் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் கூறியிருக்கிறனர்.

வட டார்வின் தவளை என்ற இந்த தவளையினம், நீர்-நிலம் வாழ் பிராணிகளைத் தொற்றிய ஒரு வித மோசமான தோல் வியாதி காரணமாக, அதன் தென்னமெரிக்க வாழ்விடங்களிலிருந்து முழுதுமாகக் காணாமல் போய்விட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்,

இந்த தவளையின் உறவினமான, தென் டார்வின் தவளையினமும், எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த முடிவுகள் அறிவியல் சஞ்சிகையான “ப்லோஸ் ஒன்” என்ற சஞ்சிகையின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தவளையினம், 1830களில் சார்லஸ் டார்வின் எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் உலகக் கடற்பயணம் மேற்கொண்டபோது அவரால் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இனத்தின் மிகவும் அசாதாரணமான அம்சம் என்னவென்றால், இந்தத் தவளைகளின் குஞ்சுகள் ஆண் தவளைகளின் குரல்வளைக்குள் வைத்து வளர்க்கப்படுவதுதான்.

(1847)

Leave a Reply

Top