உணவை சேமித்து வாழும் ஒட்டகம்! (camel)

ஒட்டகம்(camel) என்றவுடன் பாலைவனமும் (desert) சேர்த்துத்தான் அனைவருக்கும் நினைவுவரும்.
அந்த ஒட்டகத்தைப்பற்றித்தான் இங்கு பார்க்கப்போகிறீர்கள். பாலைவனத்தை வாழ்விடமாகக்கொண்டு வாழும் இந்த மிருகங்களிடம் இருக்கும் விசேடதிறன் என்றால், உணவு நீர் இன்றி நீண்ட காலத்திற்கு இவைகளால் வாழமுடிகின்றது.

ஆம், அவற்றின் முதுகில் இருக்கும் கட்டி போன்ற அமைப்பிற்குள் பல நாட்களுக்குத்தேவையான கொழுப்பை சேமித்துவைத்துக்கொள்கின்றது. அத்துடன் வயிற்றினுள் சுமார் 4 லீட்டருக்கு மேலான நீரை சேமித்துவைத்துக்கொள்கிறது. தமக்கு இரை தேவைப்படும் போது அவற்றை செமிபாட்டிற்கு அனுப்பும் திறன் இவ் ஒட்டகங்களிடம் இயற்கையாகக்காணப்படுகின்றது.

ஒட்டகங்களின் கண் இமைகளைப்பார்த்தீர்களானால் நீண்டு அழகாக இருக்கும்.
இதற்கான காரணம், மணல் புயல்கள் நிறைந்த பாலைவனத்தில் அவை பயணிக்கும் போது அவற்றின் கண்களை தூசுகள்/ மணல்கள் பாதிக்காமல் இருப்பதற்காகவாகும்.
அவற்றின் காதுகளில் இருக்கும் அடர்த்தியான முடிகளும் தூசுகள் காதுக்குள் செல்வதை தடுப்பதற்காகத்தான்.
ஒட்டகங்களின் மூக்கை அவதானித்துப்பாருங்கள் இரு புறமும் அமைந்திருப்பதுடன் சவ்வு போன்ற அமைப்பானதாக இருக்கும். இவை கூட அவற்றின் சுவாசத்தில் மணல் துகள்கள் இடையூறு செய்வதை தடுப்பதற்காகத்தான்.

ஒட்டகங்களின் கால்களை அவதானித்துப்பாருங்கள். அடிப்பகுதி தட்டையானதாக அமைந்திருக்கும். காரணம் மணலினுள் புதைவதை தடுப்பதற்காகவே!

By : Chandra  Pirabu

(4002)

Leave a Reply

Top