உருவ மாற்றமும் நிற மாற்றமும் – Adobe Flash tutorials Tamil -03

இறுதியாக உருவங்களை மறையவைப்பது எப்படி என்ற அடிப்படை ஃப்லாஸ் நுட்பத்தை பார்த்தோம்… இன்று…

பயன்படுத்தப்பட்ட மென்பொருள் : Adobe Flash CS 3
பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் : Micromedia (MX , 2004) & Adobe Flash (CS3,CS4,CS5,CS6)

முதலாவதாக உருவங்களின் நிறத்தை எவ்வாறு மாற்றுவது என்பதை பார்ப்போம். உருவங்களை மறையவைப்பது போன்றே, உருவங்களின் நிறத்தை மாற்றும் செயன்முறையின் படிகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
முதல் 3 செய்முறையிலும் மாற்றமில்லை. புதியவர்கள் முன்னைய கற்கையை இங்கு பார்க்கவும்.

செய்முறை-4
tamil-flash-tutorials-014 வது செய்முறையில், Color எனும் பகுதிக்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Tint என்பதை Click செய்யவும்.

இப்போது அதன் அருகில் ஒரு box ல் Color உம் மற்றயதில் ஏதாவது ஒரு இலக்கமும் (0 தொடக்கம் 100) குறிக்கப்பட்டு இருக்கும்.

tamil-flash-tutorials-02முதலாவது Box ல் உள்ள நிறத்தை Click செய்து தேவையான நிறத்தை தெரிவு செய்யவும். அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 100 ஆக்கவும்.
இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
0 இருந்து பெறுமதி கூட கூட தெரிவு செய்த நிறத்தின் உண்மை தன்மை அதிகரிப்பதைகாணமுடியும். அவ் எண் பெறுமதிதான் நிறத்தின் உண்மை தன்மை தீர்மானிக்கிறது.
————————————————————————————————————-

வட்டம் சதுரமாக மாறும் விளைவு.(5)

உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறை போன்றே, வட்டம் சதுரமாக மாறும் விளைவும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன.
முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை.  “அசையும் உருவங்கள்” ஐ பார்க்கவும்.

செய்முறை-3
tamil-flash-tutorials-033 வது செய்முறையில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு Delete செய்யவும்.
வட்டம் இருந்த இடத்தில் சதுரத்தை Rectangle Tool (R) மூலமாக வரையவும்.

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Right Click செய்து இரண்டாவதாக‌ காண‌ப்படுனம் Creat Shape Tween ஐ Click பன்னவும்.

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.
————————————————————————————————————-

மேலதிக சந்தேகங்களை எம்மிடம் கேட்கலாம். புதிய கற்கைகளுக்கு எம்மோடு இணைந்திருங்கள்!… 

(1240)

Leave a Reply

Top