திருட்டு பதிவர்களை தடுப்பது எப்படி? – பாதுகாப்பு , சட்ட நடவடிக்கை முறைகள்

இணையத்தில் பதிவுத்திருட்டு என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மதிப்பாய்வில் 82% ஆன பதிவுகள் “Copy-Paste” மூலமாகவே பதியப்படுகிறதாம்.

(சமீபத்தில் எமது தளத்தில் ஆக்கங்களை எழுதும் கலாக்குமரன் அவர்களின் தனி வலைத்தளத்தில் இருந்து பல பதிவுகள் திருடப்பட்டு ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டு வந்துள்ளது. அது தொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கும் பதில் இல்லை.)

பதிவுத்திருட்டை முழுமையாக ஒழிப்பது என்றால் அதிக பணம் செலவாகும். எம்மால்

இயன்றவரை எம்மை நாம் இலவசமாக பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சில முறைகளை இங்கு பார்ப்போம்.

எமது தமிழ் வலைப்பதிவர்கள் பலர் கூகுளின் blogger/blogspot சேவையை பயன்படுத்துவதால் அதை மையப்படுத்தி இந்த பதிவு எழுதப்படுகிறது.

முறை 01 :

disable-left-clickLeft-Click (இடது பக்க சொடுகல்) ஐ நிறுத்தும் முறை.

இது இடது சொடுகலை தடுக்கும். அதாவது, Copy பண்ண சொடுக முடியாது. எனினும் பல உலாவிகளில் (browsers) Ctrl+C மூலம் கொப்பி செய்துவிடுகிறார்கள்.
இவ் முறையை நான் பரிந்துரை செய்வதில்லை. காரணம் இந்த முறை தளத்திற்கு வருபவர்களை சலிப்படைய செய்யும் என்பதுடன் வலை/தளத்திலான பக்கங்களின் பார்வை எண்ணிக்கையை குறைக்க கூடும்.
மேலும் இதை கொஞ்சம் இலகுவாக Disable செய்துவிடமுடியும். :(

உங்கள் வலைத்தளத்திற்கு சென்று, template ஐ சொடுகி Edit HTML பகுதிக்கு செல்லவும்.
Ctrl + F ஐ சொடுக்கி “<head>” ஐ தட்டச்சு செய்து ENTER செய்யவும்.
<head> இற்கு கீழே…

கீழே உள்ள Code களில் ஏதாவது ஒன்றை பதிந்து “Save” செய்யவும்.

Code 1 :

<script language=’JavaScript’>
var msg=”Function Disabled”;
function disableIE() {if (document.all) {alert(msg);return false;}
}
function disableNS(e) {
if (document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {alert(msg);return false;}
}
}
if (document.layers) {
document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=disableNS;
} else {
document.onmouseup=disableNS;document.oncontextmenu=disableIE;
}
document.oncontextmenu=new Function(“alert(msg);return false”)

</script>

Code 2 :

<script type=”text/javascript” language=”JavaScript”>// <![CDATA[
var msg=”Function Disabled”;
function disableIE() {if (document.all) {alert(msg);return false;}
}
function disableNS(e) {
if (document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {alert(msg);return false;}
}
}
if (document.layers) {
document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=disableNS;
} else {
document.onmouseup=disableNS;document.oncontextmenu=disableIE;
}
document.oncontextmenu=new Function(“alert(msg);return false”)
// ]]></script>

முறை 02 :

disable-text-selectionஎழுத்துக்களை தெரிவு செய்வதை தடுத்தல்.

இது பரிந்துரைக்க கூடிய முறை. தளத்தின் பார்வையாளர்களை பாதிக்காது. எனினும் Disable செய்யக்கூடியது.

உங்கள் தளத்தில் Add a Gadget பகுதிக்கு செல்லவும் அங்கு HTML/JavaScrip ஐ தெரிவு செய்து கீழ் வரும் Code ஐ Copy-paste செய்து Save arrangement ஐ சொடுகவும்.

<!– START trickstoo disable copy paste–>
<script src=’demo-to-prevent-copy-paste-on-blogger_files/googleapis.js’>
</script>
<script type=’text/javascript’>
if (typeof document.onselectstart!=”undefined” ) { document.onselectstart=new Function (“return false” ); } else{
document.onmousedown=new Function (“return false” ); document.onmouseup=new Function (“return true” ); } </script>
<!– END trickstoo disable copy paste–>

மேலுள்ள இரு முறைகளும் தான் சிறந்த முறைகளாக கொள்ள முடிகிறது.

இவற்றை விட மேலும் எமது பாதுகாப்பிற்காக செய்யக்கூடிய முறைகள் சில…

நாம் பதிவுகளின் போது பதிவேற்றும் படங்களுக்கு எமது இலட்சனையை இடலாம்.
(எமது தளத்தில் இடப்படுவதுபோன்று)

பதிவுகளை இடும்போது, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் தொடர்புடைய முன்னைய பதிவுகளுக்கு தொடுப்பு கொடுக்கலாம்.

தொடர் பதிவுகளை இடலாம்.

திருடப்பட்ட பதிவை எவ்வாறு நீக்கலாம்?

01 . பதிவுகளை திருடுவது அமெரிக்காவில் தீர்மானிக்கப்பட்ட “THE DIGITAL MILLENNIUM COPYRIGHT ACT OF 1998” சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
எனவே, உங்கள் பதிவை ஒரு தளம் திருடி இருப்பதாக உங்களால் உறிதிப்படுத்த முடியும் எனின்…
முதலில் அந்த தளத்தை நேரடியாக தொடர்புகொண்டு பதிவை நீக்க கேட்கலாம். அவர்கள் அதற்கு மதிப்பளிக்கவில்லை எனின். அவர்களின், Servar தளத்தை இனங்கண்டு அவர்களுக்கு எமது பதிவின் மூலத்தன்மையையும் திருடியவர்களின் திருட்டு பதிவையும் சுட்டிக்காடி மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் அவர்கள் அந்த தளத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
( தள உரிமையாளர் மற்றும் சேவர்களை அறிய இதை சொடுகவும்.)

02 . Facebook போன்ற சமூகத்தளங்களில் பதிவு திருடப்பட்டு பிரசுரமானால், இலகுவாக ஃபேஸ்புக்கிற்கு அறிவிக்கலாம். தொடர்ச்சியாக திருட்டுப்பதிவுகள் போடப்படுவதாக குற்றம் சுமத்தப்படும் போது, ஃபேஸ்புக் உறுதிப்படுத்தினால், அந்த பக்கம் முற்றாக நீக்கப்பட்டுவிடும்!

03 . உங்கள் பதிவுகள் எத்தனை தடவை திருடப்படுகின்றன என்பதை அறிய tynt இணைய சேவையில் இணைந்து, உங்கள் கணக்கை திறந்துகொள்ளுங்கள். அவர்கள் தரும் Code ஐ <head> இற்கு கீழே பிரதி செய்தால், உங்கள் தளத்தில் இருந்து திருடப்படும் பதிவுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் காட்டப்படும்!

மேலும் சில பாதுகாப்பு முறைகள் இருக்கின்றன. அவை தொடர்பாக இரண்டாம் பதிவில் தேவைப்பட்டால் பார்க்கலாம்.

இணையங்களில் தேடி எழுதிய இந்தப்பதிவும் கூட திருடப்படலாம். உங்களுக்கோ நண்பருக்கோ இந்தப்பதிவு உதவும். பகிருங்கள். உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

FACEBOOK

(1061)

Leave a Reply

Top