ஒன்று தொடக்கம் ஒரு மில்லியன் – 16 வருடம் செலவு செய்து சாதனை! + PIX

Les Stewart

Les Stewart

லே ஸ்டுவேர்ட் எனும் அவுஸ்திரேலியரைப்பற்றியே இன்று பார்க்கப்போகிறோம்.
பலர் பலவிதமாக சாதனைகள் புரிவார்கள். இவர் சாதனை புரிய சுமார் 16 வருடங்கள் எடுத்துள்ளது!

ஆம், 1982 ஆம் ஆண்டில் தனது டைப்ரைட்டர் (தட்டச்சு இயந்திரம்) மூலம் “One” என தட்டச்சு செய்ய ஆரம்பித்தார்.
25 கார்த்திகை ( நவம்பர்) 1998 ஆம் ஆண்டு “nine hundred and ninety-nine thousand, nine hundred and ninety-nine.” அடுத்து “one million.” என தட்டச்சு செய்து, ஒன்றில் இருந்து ஒரு மில்லியன் வரை ஆங்கில எழுத்து மூலம் தட்டச்சு செய்த ஒரே நபர் என்ற சாதனையை தனதாக்கிக்கொண்டார்!

One - One million

One – One million

இதற்கு,
7 தட்டச்சு இயந்திரங்களும், 1000 மை நாடாக்களும், 19 890 பக்கங்களும் தேவைப்பட்டுள்ளன!
மேலும் 16 வருடங்களும் 6 மாதங்களும் இவருக்கு தேவைப்பட்டுள்ளது.

இவ்வாறான வினோத சாதனையாளர்களும் எம்மோடு இருக்கிறார்கள்.
இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

(1785)

Leave a Reply

Top