பனிமனிதனும் டார்வினின் பரிணாமக்கொள்கையும். – 3/4

போன பனிமனிதன் பதிவில்… பனிமனிதன் உண்மையாக இருப்பதற்கான விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை விளக்கத்துடன் பதிவிட்டிருந்தேன்.
இன்று அந்த உயிரினம் எவ்வாறு உருவாகி இருக்கலாம் என்பதை எழுத உள்ளேன்.

முன்னைய பதிவு…

tamil paranormalடார்வினின் பரிமாணக்கொள்கையின் படி… ஒரு தனிப்பட்ட உயிரினத்திலிருந்து பல பிரிவுகள் உருவாக சாத்தியமுண்டு.
இதன் அடிப்படையிலேயே… குரங்கை அடியாக கொண்டு மனிதன் உட்பட்ட சில விலங்குகள் தோன்றி இருந்தன.
அவ்வாறு பரிமான வளர்ச்சிப்படியில் மரபணுக்களில் ஏற்படும் சீரான‌ Mutation மாற்றத்தால் இவ்வாறான புதுவகை உயிரினங்கள் உருவாகி இருக்கக்கூடும்…
உதாரணமாக… தற்போது, சிலவகை நோய்களை தடுப்பதற்காக எதிர் தன்மை உடைய பக்டீரியாக்கள் , வரைஸ்கள் என்பன ஆய்வுகூடங்களிலேயே… மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன.
அவ்வாறு இருக்கையில்… இயற்கையில் பெரிய விலங்குகளில் இயற்கையாகவே அப்படி உருவாவதற்கு சந்தர்பமுள்ளது.

எனினும், பரிமாணக்கொள்கைப்படி…
புதிதாக உயிரினங்கள் உருவாகுகின்றன என்றால்… அது தற்போது உள்ள சூழலுக்கு தகுந்தவாறு இயைபாக்கமடைந்த உரினங்களாகவே இருக்க வேண்டும். ஆனால், இந்த பனிமனிதர்கள் எனப்படும் விலங்குகள் அவ்வாறு தற்சமைய சூழலுக்கு ஏற்ற இயைபாக்கம் அடைந்த உயிரினங்களா எனப்பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
அதுவும் மனிதனுடன் ஒத்துப்போகும் உடலமைப்பு உள்ள விலங்கினம் என்ற வகையில் பார்த்தால்… சூழலுக்கு ஒத்துவராத ஒரு விலங்காகவே உள்ளது.
( எனினும்… அவை பற்றி வரும் தகவல்கள் பனி படர்ந்த குளிரான பகுதிகளில் இருந்தே வருகின்றன… அந்த வகையில் பார்க்கும் போது… அவற்றின் உடலமைப்பு அதற்கு இயைபாக்கம் அடைந்ததாகவே உள்ளது… கடும் குளிரை தாங்க கூடியவாறு உடல் முழுவதும் கேசம் உள்ளது. )

tamil scienceசுமார் 30 000 (??) வருடங்களுக்கு முன்னர் வரை…
மனிதனுடனேயே வாழந்த இன்னொரு உயிரினம் ” நியான்டர்தால் (Neanderthal) ” மனிதர்கள்.
உருவளவில் சற்று குள்ளமானவர்களாகவும்… பெருத்த தலையுடனும்… உடல் வலு குறைந்தவர்களாகவும் இருந்த அவர்களை… வேட்டையாடுவதில் ஏற்பட்ட போட்டிகளினாலும்… மனிதனின் ஆதிக்க போக்கினாலும்… கொலைவெறுத்தனமாக முற்றாக அழிக்க நேர்ந்தது. ( சுமார் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் மனிதருடன் இணைந்து வாழ்ந்துள்ளார்கள்… 30 000 ஆண்டுக்கு முன்னர்தான் அந்த உயிரினம் முற்றாக அழிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. )

மனிதனால் வேட்டையாடப்படும் போது… தப்பும் நோக்கில் மனிதன் இலகுவில் அண்ட முடியாத இடங்களான… மலைகள், குளிர்சார்ந்த பிரதேசங்களில் இவர்கள் தஞ்சம் புகுந்திருக்க வாய்ப்புள்ளது.
அங்கு அந்த குளிருக்கு தகுந்தவாறு ஏற்கனவே வாழத்தகுதி உடைய கொரில்லா போன்ற விலங்குகளுடன் இனக்கலப்படைந்து இந்த புதுவிதமான “பனிமனிதர்” என அழைக்கப்படும் உயிரினங்கள் தோன்றி இருக்கலாம்.
( கடும் குளிர்களுக்கு அப் பிரதேசத்தில் தாக்குப்பிடிக்க முடியாத தனி நியாண்டர்தார் உயிரினம் முற்றாக ஒழிந்திருக்கும். )

சாதாரணமாக‌ மனித உடலமைப்பின் படி… 12 விலா எலும்பு (?) சோடிகள் இருக்கும்… எனினும் 5% ஆனவர்களுக்கு 13 சோடிகள் இருக்கின்றன. இது மனிதனுக்கும் நியான்டர்தால் மனிதர்களுக்கும் இடையே இடம் பெற்ற இனக்கலப்பின் விளைவாகவே கருதப்படுகிறது. ( நியான்டர்தால் மனிதனுக்கு 13 சோடிகள் இருந்தமை எலும்புப் படிவுகளில் கண்டு பிடிக்கப்பட்டது. ) மனிதனுடனேயே இனக்கலப்பு சாத்தியமாகும் போது… கொரில்லாவுடனும் சாத்தியமாகி இருக்கலாம்.

வெளி உலகிற்கு வருவதற்கு பயந்திருப்பதற்கான காரணம்…
மனிதர்கள் மீது ஏற்பாட்ட பயம் ஜீன்களில் பதியப்பட்டதால் இருக்கலாம்.

பனிமனிதன் தொடர்பாக முற்றிலும் மாறுபட்ட முடிவு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. அதை அடுத்த இறுதிப் பதிவில் பார்க்கலாம்.

(2918)

2 thoughts on “பனிமனிதனும் டார்வினின் பரிணாமக்கொள்கையும். – 3/4”

 1. மகரன் says:

  மனிதனின் பாத பரப்பளவின் ஒன்றரைமடங்கு பரப்பளவை கொண்ட ஒரு குரங்கு இனம் வாழ்ந்ததாகவும் அந்த இனத்தின் மூளையும் மனிதனை விட முன்னேற்றமடைந்து காணப்பட்டதாகவும் ஆனால் அந்த இனத்தின் படிமங்கள் கிடைக்கவில்லை என்றும், அந்த இனமே இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அனுமார் முதலான வானரங்களாகவும் இருக்கலாம் எனவும் “வளாகம்” வலைப்பூவில் அறியக்கிடைத்தது…

  1. Prabu says:

   நன்றி…
   வளாகம் வலைப்பூவும் எனதே.. அதன் மேம்பட்ட வடிவம் தான் இத்தளம். அது நியண்டர்தால் பற்றிய இன்னோர் பார்வை…

Leave a Reply

Top