இன்று தமிழ் பேசும் நாம் நாளை மாண்டரின் பேசினால்? – Xenoglossy எனும் அமானுடம்

greek-statueசிலிஃப் மற்றும் ஹெலன் தம்பதிகளுக்கு ஒரு மகன் பிறந்தான்…
தமது மகனின் செல்ல குரலை கேட்க நினைத்த பெற்றோருக்கு சற்று குழப்பம். காரணம், அவன் பேசிய வார்த்தைகள் அவர்களுக்கு புரியவில்லை. எனினும், அவன் பொருட்களை காட்டி பேசியதால் அவன் பேசுவதற்கு அது தான் அர்த்தம், அது அவனின் செல்ல மொழியென அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.

ஒரு நாள், சிலிஃப் இன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்…
சிலிஃபின் மகன் பேசியதை சிறிது நேரம் கவணித்த அவர் பெற்றோரிடம், “உங்கள் மகன் மிகச்சரியான உச்சரிப்பில் கிரேக்க மொழி பேசுகிறானே.. எப்படி?” என வினாவினார்! பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம்…

சற்று வழர்ந்ததும் அச்சிறுவன் ஆங்கில மொழியும் பேசக்கற்றுக்கொண்டான்… அதுவரை காத்திருந்த பெற்றோர்கள் அவனை கிரேக்கத்திற்கு ஒரு பகுதிக்கு அழைத்து சென்றார்கள்… அதன் நுழைவாயிலில் இருந்த சிற்பங்களை பார்த்துவிட்டு ஒரு அடி பின் வாங்கிய சிறுவன்…
“நான் இங்கு வரமாட்டேன்… எனக்கு பிடிக்கவில்லை” என்றான்…
“ஏன்? நாம் இங்கு ஒரு போதும் வந்ததில்லை… ஏன் பயப்படுகிறாய்?” என தாயார் விசாரித்த போது…
” நான் இங்கு வாந்திருக்கிறேன்…” என பதில் அளித்தான் அந்த சிறுவன்.
( மூலம் : “goldthread” – பெயர்கள் மாற்றப்பட்டு வெளியான ஆக்கம்)

1931 ஆம் ஆண்டு…

egyptian_princessரோஸ்மேரி…
இங்கிலாந்தில் வாழ்ந்த இளம் பெண், திடீரென எஜிப்திய மொழி பேசத்தொடங்கினார்!
தான் பாபிலோனிய இளவரசி எனவும், Pharaoh Amenhotep III இன் மனைவி எனவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்! (அவர் குறிப்பிட்ட நபர்கள் அவர் பிறந்ததில் இருந்து சுமார் 3 300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களாக கருதப்படுபவர்கள்!)
தனக்கு எஜிப்திய ஒலிகள் காதுகளுக்கு கேட்பதாக கூறிய அவர், தனது காதுகளுக்கு கேட்பவற்றை தெளிவாக பேசி பதியவைத்துக்கொண்டார். ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழி ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட அவர், பண்டைய எஜிப்திய மொழியில் சுமார் 5 000 பந்திகளை கூறிக்காட்டும் அளவுக்கு மொழித்தேர்ச்சியுடன் இருந்தார்.
அவர் கூறியவற்றில் சுமார் 800 பந்திகளின் உண்மைத்தன்மையை Mr. Hulme எனும் எஜிப்திய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார்!

1993 ஆம் ஆண்டு…
TalkyWomenநன்றாக கல்வி கற்ற 15 வயது நிரம்பிய ஹங்கேரியன் பெண் லூசியா, திடீரென தந்து நடவடிக்கைகள் அனைத்தையும் மாற்றி சரலமாக எந்த வித தவறுகளும் இன்றி ஸ்பானிஸ் பேசத்தொடங்கினார்! புதிதாக பிறந்த லூசியா என தன்னை அழைத்த அந்த சிறுமி, கடந்த ஆண்டு இறந்த 41 வயது நிரம்பிய பெண்ணாக தன்னை அடையாலப்படுத்திக்கொண்டார். அதேவேளை அவர் பழைய லூசியாவாகவும் நடந்துகொண்டார். (அன்னின் – அம்பி கேஸ் போல்)

இறுதியாக தனது 86 ஆவது வயதுவரை இரட்டை நடத்தை, இரட்டை மொழியுடன் வாழ்ந்த லூசியா… தனது சிறுவயதில் எந்த விதத்திலும் ஸ்பானிய மொழியுடன் தொடர்புபட்டிருக்கவில்லை! அவர் அவ் மொழியை கற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை!

என்ன இது, எந்த வித கருத்தும் இல்லாமல் வெறும் சம்பவங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என நினைக்கவேண்டாம். நாம் மேலே வாசித்தவை மறுபிறவிக்கதைகள் என நினைக்கத்தூண்டும். ஆனால், நான் இங்கு இச்சம்பவங்களை குறிப்பிட்டது அதற்காக அல்ல.

உலகில் நடைபெறும் சம்பவங்களில் விளங்கப்படுத்தியும் படுத்தவும் முடியாத சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று!
இதை Xenoglossy (எக்ஸ்னோகுளோஸி) என அழைப்பார்கள்…
இது மறு ஜென்மம் பற்றி பேசும் பிரிவல்ல… திடீரென ஒரு நபர் தனக்கு எப்போதுமே சம்பந்தமில்லாத ஒரு மொழியில் பேசுவதை இந்த Xenoglossy குறிக்கும்.
அதாவது, இன்று தமிழ் பேசிக்கொண்டிருக்கும் நாம், நாளை திடீரென மான்றின் மொழி பேசினால்? அது தான் எக்ஸ்னோகுளோஸி!

இது தொடர்பாக உங்களுக்கு தெரிந்த தகவல்களை கூறுங்கள்… வாசகர் ஆர்வத்தை பொறுத்து இது தொடர்பாக மேலும் ஆராயலாம்…

மேலதிக அமானுடங்களுக்கு…

(4317)

9 thoughts on “இன்று தமிழ் பேசும் நாம் நாளை மாண்டரின் பேசினால்? – Xenoglossy எனும் அமானுடம்”

  1. Sathish says:

    Maru jenmathai ettru kolla mudiyatha ariviyalalargal itharkuitharku xenoglossy endru peyar koori irkalam

  2. Sathish says:

    Mari jenmathai ettru kolla mudiyatha ariviyalalargal itharkuitharku xenoglossy endru peyar koori irkalam

  3. kavisaran says:

    இப்பதிவை இப்பொழுதுதான் படிக்க நேர்ந்தது. ஆர்வம் தூண்டும் பதிவு. நமது நாட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லையா? நடந்து மறைக்கப்பட்டதா? நடக்கவில்லை எனில், நடக்காமல் போனதிலும் காரணம் இருக்க வாய்ப்பு உண்டா?

  4. வணக்கம்… உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  5. Bharath says:

    Respected Prabhu sir,

    Really Very intresting pls write abt illuminity
    Regds,
    http://tradersguides.blogspot.in/

    1. Prabu says:

      Tnx…
      Pls cl me just “Pirabu”
      I’ll post illuminati post in dec

  6. nalla pathivu.. vazhththukkal

  7. Sureshkumar Vigitha says:

    ya .this is true

Leave a Reply

Top