ஜெக் : நிஜ வாழ்வில் “பட் மான்” ஆக புகழப்பட்ட நாய்!

Black-dog-e1382258070278ஸ்வன்சியா ஜென்… வில்லியம் தோமஸ் எனும் உரிமையாளருடன் தாவ் நதிக்கரையில் வாந்துவந்த ஒரு நாயாகும்.

இங்கிலாந்தின் தாவ் நதியில் சிறுவன் ஒருவன் தவறுதலாக விழுந்துவிட்டான். தூரத்தில் இருந்து அதை கவணித்த ஜெக் எனும் நாய் ஓடிச்சென்று போராடி சிறுவனை தனது கழுத்தினால் தள்ளித்தள்ளி நதிக்கரைக்கு கொண்டு சென்று காப்பாற்றியது. ஆனால், அதை நேரில் கண்டவர் எவருமில்லை… சிறிவன் சொன்ன போதும் எவரும் நம்பவில்லை…

சில வாரங்களுக்கு பிறகு….
நீச்சல் வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக அதே ஆற்றுப்பகுதியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதை கண்ட ஜெக் உடனே சென்று அவர் மாட்டி இருந்த இடத்தில் இருந்து விடுவித்து காப்பாற்றியது. இதை பலரும் நேரில் கண்டார்கள். தொடர்ச்சியாக சுமார் 27 மனிதர்களை தனியொரு நாயாக இருந்து ஜெக் காப்பாற்றியது.

ஜெக்கின் இந்த துணிச்சலானதும் “மனிதாபிமானமானதுமான” இந்த செயலை கெளவ்ரவிக்கும் முகமாக, “the Bravest Dog of the Year Award” என்ற பட்டத்தையும், வழமையாக மனிதர்களிடையே பகிரப்படும் பரிசுகளில் வெள்ளிப்பரிசினையும் கொடுத்தது நகரசபை.

மக்கள் மத்தியில் அக்கால நிஜ பட்மானாக திகழ்ந்த ஜெக்கின் நினைவாக Swansea FC “The Swansea Jacks.” என்ற பெயரில் இன்றுவரை உதைப்பந்தாட்டக்களகம் உள்ளது!

(1776)

Leave a Reply

Top