பேர்முடா முக்கோண வலையம் – தீர்க்கப்படாத மர்மம்! : அறிமுகம்

bermuda-triangle-tamilதுரித கதியில் நகர்ந்துகொண்டிருக்கும் உலகில், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்திய வண்ணம் அனைத்து உயிரினங்களுக்கும் மேலான உண்ணதமான உரினினம் என்ற இறுமாப்புடன் நாம் அனைவரும் நகர்ந்துகொண்டிருக்கின்றோம்.

எவ்வளவு தான் அறிவு மேம்பட்டாலும்; இன்னமும் பல மர்மங்கள் எமது அறிவியலுக்கு ” நீ ஒரு முட்டாள்” என்ற ரீதியில் சவால் விட்டபடிதான் உள்ளது. ஏலியன்ஸ், கருந்துளைகள், பேய்கள், பேர்முடா முக்கோணவலையம் உள்ளடங்களாக ஒரு மர்ம பட்டியலே நீண்டு செல்கிறது…

ஏற்கனவே, “ஏலியன்ஸ்” தொடர்பாக குறிப்பிட்ட அளவு இந்த தளத்தில் பார்த்திருக்கின்றோம்…
இப்போது மேலும் ஒரு மர்மத்தை ஆராய்வோம்… அது தான் பேர்முடா முக்கோணம் !

பேர்முடா முக்கோண வலையம் பற்றி பெரிதாக அறிமுகம் செய்யவேண்டியதில்லை. நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பேர்முடா பற்றி தெரிந்துவைத்திருக்கின்றோம். (தெரிந்தவர்கள் தான் இந்த பதிவை தேடி வந்தும் இருப்பீர்கள்!) எனினும், புதியவர்களுக்காக ஒரு சிறிய அறிமுகத்தைப்பார்க்கலாம்.

bermuda triangle tamilபேர்முடா முக்கோணம்…

அமெரிக்காவின் ஃப்லோரிடா மாணிலத்திற்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில்; ஃப்லோரிடா, சன்யுவான் பியூட்ரோறிகா மற்றும் பேர்முடா பகுதிகளை இணைக்கும் போது வரும் முக்கோணப்பகுதியே பேர்முடா முக்கோணம் எனப்படுகிறது.
அதிகமான மர்ம நிகழ்வுகள் பேர்முடா தீவை ஒட்டி நகர்வதால் பேர்முடா முக்கோணம் என இவ் வலையம் அறியப்படுகிறது.
( பேர்முடா தீவு, 1505 ஆண்டில் Juan de Bermúdez எனும் ஸ்பானிய தலைமை கப்பலோட்டியால் கண்டறியப்பட்டது. 1707 இல் பிரித்தானிய நாடு கடந்த ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.)

இனி…
பேர்முடா முக்கோண வலைய பகுதியின் மர்மத்திற்கான பின்னனியை பார்க்க முதல், பேர்முடா பகுதியில் இடம்பெற்ற பிரபல மர்ம சம்பவங்களை பார்க்கலாம்…

Tbf-19-51945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி…

ஃப்லோரிடாவில் உள்ள LAUDERDALE எனும் இராணுவ விமான தளத்தில் இருந்து சாள்ஸ் கரொல் ரெய்லர் எனும் அனுபவ விமானியுடன் புதிதாக இணைந்துகொண்ட 14 விமானிகளும் பயிற்சிக்காக ஃப்லைட் 19 எனும் விமானத்தில் புறப்பட்டார்கள். விமான பயிற்சியின் போது விமானி எப்போதுமே தரை கட்டுப்பாட்டகத்துடன் தொடர்பில் இருப்பது வழமை. அன்றும் அது போலவே நடந்தது, ஆனால்…

பிற்பகல் 3.15 மணியளவில் கரொல் ரெய்லர் விமான கட்டுப்பாட்டகத்தை பதட்டத்துடன் தொடர்புகொண்டார்…

ரெய்லர் : எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை, எமது கருவிகல் வழமைக்கு மாறாக செயற்படுகின்றன…

கட்டுப்பாட்டகம் : நீங்கள் இப்போது எங்கே உள்ளீர்கள்?

ரெய்லர் : என்னால் இடத்தை கூறமுடியாதுள்ளது. நாம் எங்கிருக்கிறோம் என எமக்குதெரியவில்லை.

கட்டுப்பாட்டகம் விமானத்தின் இருப்பிடத்தை ஊகித்துக்கொண்டு மேற்குத்திசையில் திருப்புமாறு பணித்தது.

ரெய்லர் : எம்மால் மேற்குத்திசையை இனங்காண முடியவில்லை. இங்கு எல்லாமே விசித்திரமாக உள்ளது. கடலின் நிறம் வெண்மைப்படுகிறது!

தொடர்பு துண்டிக்கப்பட்டது…

பிற்பகல் 3.30….

“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த இறுதி செய்தி!

ஃப்லைட் 19 திசை மாறுவதாக அறிந்த கட்டுப்பாட்டகம், அவர்களை மீட்க மார்டின் மரினர் எனும் விமானத்தை அனுப்பிவைத்தது. அவ் விமானி “சுமார் 6000 அடி உயரத்தில் பலத்த காற்று வீசுகிறது” என அறிவித்தார். சற்று நேரத்தில் அவ் விமானமும் ரேடர் கருவிகளை விட்டு அகன்றது.

இரவு 7 மணி…
கட்டுப்பாட்டகத்திற்கு FT… FT… எனும் தெளிவற்ற சமிக்ஞை கிடைத்தது… அது காணாமல் போன ஃப்லைட் 19 இன் இரகசிய குறியீடாகும்….

அவ் விமானத்திற்கு என்ன நடந்தது?
என்ன நடந்திருக்கலாம்?
இன்றுவரை அவ் விமானம் பற்றி தகவல்கள் இல்லையா?

தொடர்ந்திருங்கள் அறியலாம்….

Ref ;  Lost Patrol, militaryairshows, Aalkadalil aavi raajyam

(5842)

6 thoughts on “பேர்முடா முக்கோண வலையம் – தீர்க்கப்படாத மர்மம்! : அறிமுகம்”

  1. Siru Baba says:

    பேர்முடா முக்கோண வலையம் – தீர்க்கப்படாத மர்மம்!… மர்மங்களை நான் தீர்கின்றேன். அமானுடம் கூறும் ஆதார உண்மைகள் இக்கட்டுரையின் முழுவடிவத்தை எனக்கு அனுப்பிவைக்கவும். அத்துடன் இக்கட்டுரையின் ஆசிரியர் பெயர் என்ன? ( கட்டுரைகளை யார் எழுதுகின்றார்கள் என்ற விபரம் ஏன் தரப்படுவதில்லை வெட்டை வெளியில் ஏன் மொட்டைக்கடுதாசி?) விரைவில் பதில்களுடன்… சிறுபாபா ஜெகாதரா

    1. Prabu says:

      Hi Siru babu…
      இவ் ஆக்கத்தொடரிலேயே எந்து போக்கில் மர்மம் தீர்க்கப்படும். உங்கள் தீர்வை தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.
      ஆக்கத்தில் பயன்படுத்தப்படும் சம்பவங்களுக்கான மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கம் எழுதுபவரான எனது பெயர் Author என் அடையாளப்படுத்தப்படுகிறது.(வெட்ட வெளியில் எழுதும் மொட்டை கடதாசி இல்லை. உங்கள் கவணத்தில் தவறு.)

      ஆக்கம் நேரம் இருக்கும் போது எழுதப்படுவது. எனவே முழுவடிவம் இல்லை.

    2. Prabu says:

      மன்னிக்கவும், எழுதுபவரின் பெயர் Prabu என் ஆக்க தொடக்கத்திலேயே உள்ளது.

  2. B,RAJESH KUMAR 8189923153 says:

    thagavaluku nanri

Leave a Reply

Top