ஹெரேரோ (Herero) இன அழிப்பு… – உலகம் மறந்த பக்கங்கள்

ஏற்கனவே இன அழிப்புத்தொடர்பான பகுதியில், தாஸ்மானிய இன அழிப்பு பற்றி பார்த்திருந்தோம் (எழுத்தாளர் மதனின் புத்தகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக்கொண்டு). இன்று…

ஹெரேரோ (Herero) இன மக்களின் இன அழிப்பை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

தென் ஆபிரிக்காவில், நபீபியா நாட்டில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் ஹெரேரோ குல மக்கள். சுமார் 2000 கிலோமீட்டர்கள் விசாலமான இந்த பிரதேசத்தில், பயிர்ச்செய்களைகள் சாத்தியமல்லாது விட்டாலும், வைரங்கள், விசேட உலகங்கள் செறிந்த ஒரு பிரதேசமாக இது இருந்தது.

1880 இல் அதன் விசேடதன்மையை கண்டறிந்த ஜேர்மனியப்படைகள் அந்த பிரதேசத்தை தமது காலனித்துவத்திற்கு உட்படுத்த நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எதிர் பார்த்ததற்கு மாறாக, அப் பிரதேச மக்களின் எதிர்ப்பு வலுத்தது. ஜேர்மன் படை தோல்வியுற்றது.

crowd_detail

இந்த தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத ஜேர்மன்; ஜெனரல் லொதர் வொன் த்றொத‌ (Lother von Trotha) என்ற கொடூர படைத்தளபதியையும் சுமார் 10000 படைவீரர்களையும் அனுப்பிவைத்தது. செல்வச்செழிப்பான அந்த பிரதேசத்தை கைப்பற்றுவதற்காகவே இந்தப்பெரிய ஏற்பாடு.

அந்த பிரதேசத்துமக்களின் குடி நீர் பெறும் மூன்று முக்கிய நீர் வளப்பகுதிகளுக்கும் விச திரவத்தை செலுத்தி அவர்களின் அடிப்படை குடி நீர் தேவைகளை தடை செய்தார்கள். நான்காவது பகுதி பாலைவனப்பகுதியாகும். அதைக்கடந்தால் தான் குடி நீர் பெற முடியும். ஜேர்மனியர்கள் நினைத்தது போல், மூன்று பகுதியிலும் குடி நீர் விசமானதால், ஹரேரோ மக்கள் நான்காம் பகுதியான பாலைவனப்பகுதியை நோக்கி நகர்ந்தனர். அப்போது, லொதர் வொன் தனது படைகளுக்கு இட்ட கட்டளை, பாலைவனப்பகுதியில் பிரவேசிக்கும் அனைத்து ஹரேரோ மக்களையும் சுட்டுத்தள்ளுங்கள் என்பதே!

இறுதியில், குறிப்பிட்ட மாத இடைவெளியில்… 80 000 ஆக இருந்த ஹரேரோ மக்களின் எண்ணிக்கை 15 000 ஆக குறைந்துபோனர். ஹரேரோ ஜேர்மனியின் காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டது. எஞ்சியவர்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.

இந்த இனப்படுகொலை தொடர்பாக, எந்த வித சர்வதேச நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

உலகம் மறந்த மேலும் பல இன அழிப்புக்களையும், யுத்தங்களை அறியலாம் தொடர்ந்திருங்கள்…

(3138)

Leave a Reply

Top