நீதிபதிகளின் இரு வினோத தண்டனைகள்! -02

கிறிஸ்மஸ் மட்டும் சிறையில்!

அமெரிக்காவின் ஒஹினோ பகுதியில்,
அகதிகளை நாடுகடத்துவதற்கு தனது ஓட்டுனர் பத்திரத்தை கொடுத்துதவிய Betina (பெட்டினா) எனும் இளம் பெண்ணிற்கு 5 வருடங்கள் கிறிஸ்மஸ் தினத்தை சிறைச்சாலையொல் கழிக்க வேண்டும் என வினோத தீர்ப்பு வழங்கப்பட்டது. கிறிஸ்மஸ் தினத்திற்கு முந்தைய நாளே அவர் சிறைச்சாலைக்கு தானாக செல்ல வேண்டும். கிறிஸ்மஸிற்கு அடுத்த நாள் விடுவிக்கப்படுவார்.
அப்படி கிறிஸ்மஸ் தினத்தன்று சிறைச்சாலைக்கு செல்லத்தவறினால்; 15 ஆண்டுகள் சிறையில் கழிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது!

sentence_10-christmas-jail

இசை கேட்கும் தீர்ப்பு!

அன்று விக்டர் எனும் 24 வயது இளைஞர் ஒருவர் அதீத சத்தத்துடன் ரப் பாடல்களை கேட்டதற்காக உடனடியாக 150 அமெரிக்க டொலர்களை தண்டப்பணமாக கட்ட வேண்டும் என நீதிபதியால் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், நீதிபதி அவரது தண்டனையை குறைத்து ஒன்னொரு மாற்றுத்தீர்ப்பையும் வழங்கினார். அதன் படி, 35 அமெரிக்க டொலர்களை கட்டினால் போதுமானது. ஆனால், சுமார் 20 மணி நேரங்கள் பேஜ், பீத்தோவன், ஷொபன் போன்றவர்களின் கிலசிக் இசைத்தொகுப்புக்களை கேட்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

15 நிமிடங்கள் இசையைக்கேட்ட அந்த இளைஞர், “இவை இசையே அல்ல” என சொல்லி முதல் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்தார்!

entence_9-beethoven

 

இணைந்திருங்கள், மேலும் அறியலாம்…

(1810)

Leave a Reply

Top