நீதிபதிகளின் இரு வினோத தீர்ப்புக்கள்! – 01

கழுதையுடன் ஊரைச்சுற்றிவர தண்டனை!

2003 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பெயின்ஸ்வில் நகரசபை நீதிபதி அந்த ஊரைச்சேர்ந்த இரு இளைஞர்களுக்கு “மன்னிப்பு அட்டையை தாங்கியபடி, கழுதையுடன் ஊரைச்சுற்றிவர வேண்டும்” என வினோத தீர்ப்பை வழங்கியது.

ஜெசிக்கா லோங் மற்றும் பிறைன் பத்றிக்ஸ் என்ற 19 வயது இளைஞர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து அந்த ஊரிலுள்ள ஒரு தேவாலையத்தில் இருந்த பால ஜேசு சிலையை திருடியிருந்தார்கள். அதற்கான தண்டனையாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

sentence_1-donkey
வீட்டைவிட்டு வெளியேறி 30 நாட்களுக்குள் வேலை தேட வேண்டும்!

25 வயது நிரம்பிய ஸ்பெயின் இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் மீது புகார் செய்து நீதிமன்றத்திற்கு அழைத்திருந்தார்.

தனது பெற்றோர் மாதாந்தம் 400 யூரோ காசுகளை தனக்கு கைச்செலவாக தரவேண்டும். ஆனால், அவர்கள் அதை தருவதில்லை என புகார் கொடுத்திருந்தார். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி; அவரது வழக்கிற்கு எதிரான சட்டத்தை பயன்படுத்தி அதன் படி சட்டக்கல்வி கற்ற குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் 30 நாட்களுக்குள் அவர் தனக்குரிய வேலையை தேடிப்பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்!

a98733_sentence_5-move-out

மேலும் வியக்கலாம் இணைந்திருங்கள்…

(1973)

Leave a Reply

Top