கயிறு மூலம் நயாகரா அருவியை கடந்த முதல் மனிதன்!

ஜூன்(ஆனி) மாதம் 30 ஆம் திகதி, 1859 ஆம் ஆண்டு ஜோன் ஃப்ரோன்ஸுவ பொலொட(ன்) (Jean François Blondin) என்பவர் நயாகரா அருவி மேல் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து கடந்து சாதனை புரிந்தார்.

28/02/1824 இல் ச ஒமர் (St. Omer) ஃப்ரான்சில் பிறந்த இவர் தனது 5 வயதிருக்கும் போதே சாகாசப்பயிற்சிகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டார். ஐந்தரை வயதில் “The Boy Wonder” என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஆச்சரியங்களை ஏற்படுத்தத்தொடங்கினார்.

நீண்ட காலமாக நயாகராவை கடக்க வேண்டும் என இருந்த அவர், 1859 இல் நயாகராவை கடக்கும் போது பல அரிய செயல்களை செய்துகாட்டினார். அதாவது, அவர் கடக்கும் போது தனது மனேஜரை முதுகில் சுமந்தவாறு கடந்தது மட்டுமல்லாது, சிறிது நேரம் கண்களை மூடியும், ஒற்றைக்காலில் பயணித்தும் தனது அதீத திறமைகளை வெளிக்காட்டினார்!

இறுதியாக இறப்பதற்கு ஒருவருடம் முன்னர் கயிற்றின் மேல் சைக்கிளில் பயணித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

பல உயிராபத்து சாதனைகளை நிகழ்த்திய இவர் 19/2/1897 இல் சக்கரவை வியாதியால் இறந்தார்.
tamil_blondin

(1392)

Leave a Reply

Top