ஆதாமின் அப்பிள் என்றால் என்ன? – (Adam’s apple tamil)

ஆண்களின் கழுத்துப்பகுதியில் சற்று கழுத்தைப்புடைத்துக்கொண்டு நிற்கும் பகுதியை ஆதாமின் அப்பிள் (Adam’s apple) என்று அழைக்கிறார்கள்.

இச் சொல்லை சிறுவயதில் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆதாம் விசம் அருந்திய பழத்தை உண்ணும் போது ஏவால் கழுத்தை இறுக்கியதால் அவ்வாறு ஏற்பட்டதாகவும், அதனால் எல்லா ஆண்களுக்கும் கழுத்துப்பகுதியில் அது காணப்படுவதாகவும் கூறுவார்கள். ( சரியான கதை தெரியவில்லை, தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.)

அதே வேளை, இவ் ஆதாமின் அப்பிளுக்கு காரணமாக இந்துக்களின் புராணங்களில் இருந்தும் ஒரு கதை கூறப்படுவதுண்டு. அதாவது, தேவர்களைக் காக்கும் முகமாக விசம் உள்ள அமிர்தத்தை சிவன் உண்ணும் போது, உமையம்மையார் கழுத்தை இறுக்கி விசத்தை கழுத்திலேயே தங்க செய்த்தால் ஏற்பட்ட வீக்கம் என்று சொல்வார்கள்.

நாம் இங்கு பார்க்கப்போவது அதன் உண்மை விளக்கத்தை!

உடலின் அனைத்து செயற்பாடுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும் தைய்ரொயிட் சுரப்பியின் இருப்பிடமே ( தைய்ரொயிட் குறுத்தெலும்பு – Thyroid cartilage ) இந்த “ஆதாமின் அப்பிள்” என்றழைக்கப்படும் பகுதியாகும்.
வயது வந்த ஆண்களிடையே இந்த குறுத்தெலும்பு 90° வரையில் சரிந்திருக்கும்! அதனாலேயே கழுத்தை புடைத்துக்கொண்டு வெளியே நீட்டுக்கொண்டு இருக்கிறது.
அதேவேளை பெண்களிடம் இருக்கும் இக் குறுத்தெலும்பு 120° வரை சரிந்திருக்கும்… எனவே பெண்களின் கழுத்தை இது புடைத்துக்கொண்டு இருக்காது!

மேலும் சதைப்பிடிப்பான கழுத்தையுடைய ஆண்களுக்கு இவ் குறுத்தெலும்புகள் வெளித்தெரிவதில்லை.
சில ஆண்களுக்கும் 120° வரை வழைந்திருப்பதால் அவர்களுக்கும் தெரிவதில்லை.

நமது உடலின் உயரம், கண்களின் அழவு என்பவற்றைத்தீர்மானிக்கும் ஒரு காரணியான இந்த தைய்ரொய்ட் குறுத்தெலும்பின் உண்மைத்தகவலை நாம் அறிந்திருத்தல் அவசியமாகும்.

முன்னைய காரணிகளை, கதைகளாக கொள்ளலாம். :)

By : Chandran Pirabu

(3467)

Leave a Reply

Top