பிரமோன்ஸ்

பிரமோன்ஸ் பற்றி நம்மில் சிலர் அறிந்திருக்கலாம், ஆனால் பலருக்கு இது ஒரு புதிய தகவலாக இருக்கும்.எறும்புகள் ஊர்ந்து செல்லும்போது சாரை சாரையாக அதாவது ஒரு கோட்டின் மீது ஊர்ந்து செல்வது போல வரிசை கலயமல் செல்வதற்கும், ஒரு தேனீயை துன்புருத்தினால் அந்த கூட்டமே துரத்தி வருவதற்கும், ஒரு பசுவின் பருவ காலத்தை கலைகள் அறிந்து பிந்தொடர்வது என அனைத்திற்கும் காரணம் இந்த பிரமோன்களே.

bee

 

பிரமோங்கள் என்பவை ஒரு வித ஹார்மோன்கள்  ஆகும்.பொதுவாக இந்த ஹார்மோன்கள் உடலின் உள் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த உடலின் உள்ளயே பயன் படுத்தப்படும். ஆனால் பிரமோன்கள் ஒரு உயிரியால் (ஒரு செல் உயிரி முதல் பல செல் உயிரி வரை)உற்பத்தி செய்யப்பட்டு, காற்றில் வெளியேற்றப்பட்டு, அந்த உயிரின் கூட்டதிற்கோ அல்லது அந்த இனதிற்கோ தகவல்களாக பரிமாறப்படும்.

இந்த தகவல் எந்த விதமான தகவல்களாகவும் இருக்கலாம்.எச்சரிக்கை விடுப்பது, உதவிக்கு அழைப்பது, இனபெருக்கதிற்கு தயார் என்று அறிவிப்பது,தாயும்-பிள்ளையும் இணைப்பது, வழிநடதி செல்வது என்று பா வகையன் தகவல்கள் பல்வேறு வித பிரமோன்களால் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன.

பூச்சி இனங்களில்  இந்த பிரமோன்களை கண்டுபிடிப்பது எளிதாவாதல் அதில் பல ஆய்வுகள் நடந்துள்ளன. சில மனிதர்கள் தேனீகளை தங்கள் உடல் முழுவதும் பரப்பிக்கொண்டு எந்தவித ஆபத்தும் இன்றி பல மணி நேரம் கூட இருப்பார்கள்.இது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கும், ஆனால் இதற்கு பின் உள்ள அறிவியல் தெரிந்தால் நீங்களும் கூட அதை முயற்சிக்கலாம்.தேன் கூட்டில் ஒரு ராணி தேனியை சுற்றி மற்ற அனைத்து தேனிகளும் மொய்க்கும்.அந்த ராணி தேனீ இல்லாவிடில் தேனீக்கள்  கூட்டில் இருக்காது.இதற்கு காரணம் அந்த ராணி தேனீ வெளியிடும் பிரமோன்கள் அனைத்து தேனிகளையும் ஈர்க்கின்றன.அந்த ராணி தேனீயின் பிரமோனை செயற்கயாக உற்பத்தி செய்து அதை உங்கள் மீது தடவிக் கொண்டால் தேனீக்கள் உங்களி ராணி தேனீ என்று நினது உங்கள் மீது ஈர்புடன் மொய்க்க தொடங்கும்,ஆகாயல் அவை கொட்டுவது இல்லை.நீங்கள் என்றாவது தேன் கூட்டினை கலைதிருபிர்கள், அப்போது ஒரு சில தேனிக்கலால் அனுப்பப்படும் எச்சரிக்கை அல்லது ஆபத்து அன்ற தகவல்(பிரமோன்), மற்ற தேனிக்கலால் உணரப்பட்டு, அவை ஆனதும் தாக்குகின்றன.

bees

இந்த பிரமோன்களைப் பற்றி பல ஆராய்ச்சிகள்  நடந்து வருகின்றன.இந்த பிரமோன்களைகக் கொண்டு விவசாயத்தில் பூச்சிகளி கட்டுப்படுத்துவது, யானைகள்  மற்றும் காடு விலங்குகளை கட்டுபடுதத்துவது போன்ற பல ஆய்வுகள் நடக்கின்றன.

மனிதர்களில் பிரமோன்:

மனிதர்களில் பிரமோன்கள் பற்றி பல ஆய்வுகள் நடந்தாலும்,  அது கண்டுபிடிக்கக்  கூடியதாக இல்லை.

பல வாசனை திரவிய நிறுவனங்கள் (ex: like scent,perfume companies) மனித உடல் பாலியல் பிரமோனை வெளியிடுகிறதா, அதை உற்பத்தி செய்து தங்கள் வாசனை திரவியங்களில் கலந்து அதிக விற்பனை செய்ய முயற்சித்து வந்தாலும் இதுவரை அப்படி எதுவும் உறுதியாக கண்டுபிடிக்கப் படவில்லை.இருந்தாலும் பெண்களின் கண்ணீரில் உள்ள ஒரு பொருள் (பிரமோன் ஆக இருக்கலாம்), ஆண்களின் பாலியல் எண்ணத்தை தாடுபதாக அல்லது  குறைபதாக  கண்டுபிடிதுள்ளனர் உள்ளனர்.

(1385)

Leave a Reply

Top