iPhone 5S தொழில் நுட்ப பார்வை – அறிமுகம் (Review With Pix)

தொழில் நுட்ப உலகில் சமீபகாலமாக அதிக வதந்திகளுக்குள்ளான iPhone 5S (கூடவே 5C உம் அறிமுகமானது.) சற்று முன்னர் முதல் முதலாக உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

விசேட தொழில் நுட்ப அம்சங்கள் :

iPhone 5S முதலாவது 64-bit chip கொண்ட முதலாவது கைத்தொலைபேசியாகும்!
( எனினும் 32-bit அப்பிளிக்கேஷன்களுக்கு ஏற்புடையதாக தொழிற்படும்.)

முதல் முதலாக Apple- A7 processor பயன்படுத்தப்பட்டுள்ளது.
( இது முதல் முதலாக வெளியான ஐஃபோனை விட 56 மடங்கு வேகமாக இயங்க உதவுகிறது! )

OpenGP ES 3.0 தொழில் நுட்பம், தொலைபேசி விழையாட்டுக்குளுக்கு புத்துணர்வுகொடுக்கும்.
( வேறு எந்த தொலை பேசியிலும் இத்தொழில் நுட்பம் இதுவரை இல்லை! )

3G தொழில் நுட்பத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் போது சுமார் 10 மணி நெரங்கள் இயங்க கூடியவகையில் பட்டரி இயங்கு காலம் உள்ளது. 10 மணி நேரம் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கவும் பட்டரி செல்லுபடியாகும்.
சாதாரன நிலையில் வைத்தால் 250 மணி நேரங்கள் பட்டரி இயக்க காலம் நீடிக்கும்.
( இது முந்தைய iPhone 5 ஐ விட 25 மணி நேரங்கள் அதிகமாகும்.)

8 மெகாபிக்ஷல் கமெராவே இன்னமும் உள்ளது. ஆனால், panorama படப்பிடிப்புக்களின் போது 28 மெகாபிக்ஷல் திறனுடன் செயற்படும்.
( எனினும், அசைவுகளின் போதும் தெழிவாக புகைப்படத்தை எடுக்கும் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.)
HD வீடியோக்களை எடுக்க முடிவதுடன், அதே வீடியோவை நேரடி கால அளவில் ஆனால், Slowmotion முறையில் எடுக்க முடிகிறது.

iSO 7 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேலும் தெளிவான திரை அசைவுகளுக்கு உதவுகிறது.

கைவிரல் உணர் Home Button பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பொத்தானை அழுத்தாதே தொடுகை மூலம் iTune கொள்வனவிற்கு உதவுகிறது.

FaceTime camera புதிதாகவுள்ளது.

112 கிராம் நிறை.

08

07

06

05

04

0301

iPhone 5C

iPhone 5C

 

(1481)

2 thoughts on “iPhone 5S தொழில் நுட்ப பார்வை – அறிமுகம் (Review With Pix)”

  1. Aakif Ahamed says:

    the grate of my stevejops

  2. Krish Na says:

    good technology

Leave a Reply

Top