19 வயது இளைஞனின், சமுத்திரங்களை சுத்திகரிக்கும் திட்டம்!

ஜேர்மனியை சேர்ந்த பொயன் சலட் ( Boyan Slat) என்ற 19 வயது மாணவன் ஆய்வாளர்களை வியப்பூட்டும் அளவிற்கு ஒரு சாதனத்தை அமைத்துள்ளார்.

‘ocean cleanup’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் ஒரு திட்டமாகும். சுமார் 5 லட்சம் தொன் நிறை பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றக்கூடியது இந்த சாதனம்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 5ஆண்டுகளில் பசுபிக் சமுத்திரம் உட்பட அனைத்து சமுத்திர கழிவுகளையும் நீக்கமுடியும் என பொயின் கூறியுள்ளார்.

இச்சாதனம் மூலம், கடல் வாழ் உயிரினங்களுக்கோ தாவரங்கள்,கணியவளங்களுக்கோ ஆபத்து ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ் சாதனம் இயங்கத்தேவையான சக்தி, சூரியனில் இருந்தும் கடல் அலைகளில் இருந்தும் பெறப்படும்.

image

image

image

(2149)

Leave a Reply

Top