Mars One – செவ்வாய் நோக்கிய பயணம் 2022 இல்!

நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால், Mars one என்ற புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம். செவ்வாய் பயணிப்பதற்கான இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே கலந்துகொள்பவர்களுக்கான அனுமதி தீர்ந்துவிட்டது!

திட்டத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களின் பணத்தில் உருவாகவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 4பேர் 2022 ஆம் ஆண்டு செவ்வாய் செல்லவுள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியவிடையம் என்னவெனின், இவர்கள் ஒரு வழிப்பயணத்தை மட்டுமே மேற்கொள்ளவுள்ளார்கள். திரும்பு வருவதற்கான திட்டம் இதுவரை அறிவுக்கப்படவில்லை. (ஒரு வழிப்பயண அனுமதியே கொடுக்கப்பட்டது)

குறிப்பிட்ட நபர்களுக்கு இப்போதிருந்தே செவ்வாயில் தங்குவதற்கும், அங்கு பயணிப்பதற்குமான பயிற்சிகள் ஆரம்பமாகி விட்டன. செவ்வாய்க்கான பயணம் சுமார் 7 மாதங்களாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயின் சீதோஷ்ன நிலையினால், சுவாசிப்பது உட்பட வினோத நோய்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவருக்கு 50 மீட்டர் பரப்பளவுடன் இவ் பயண விமானம்(?) செய்யப்படவுள்ளது. 80% பொழுதை இவர்கள் இங்கேயே கழிக்கவுள்ளனர்.

செவ்வாய் சென்று வருவதற்கான இரு தரப்பு பயணம் 2030 களில் சாத்தியமாகும் என நாசா அறிவித்துள்ளது.

image

image

(2753)

Leave a Reply

Top