தூக்கம் வருவதற்கு எது முக்கிய காரணம்?

தூக்கம் பற்றிய ஆராய்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே ஒரு துறை நிண்ட்ஸ் (NINDS – National Institure of Neurological Disorders and Stroke) செயல்படுகிறது.
முக்கியமாக வயசுக்கு வரும் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அந்த வயதுகளில் நிம்மதியான தூக்கம் அவசியம் என்கிறார் பெண் டாக்டர் சிரேலி.

img98371
ஒரு விசயம், விலங்குகள் தூங்கும் நிலையிலேயே எப்படி உசார் நிலையில் இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கிறது.
மூளை நுண் நரம்பு செயல்பாடு ஒழுங்காக நடக்க தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியமானது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஹார்மோன் வளர்ச்சிக்கும் ஆழ்ந்த தூக்கத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. தூக்கத்தின் போதே உடலின் பல பாகத்தின் செல்களில் உள்ள புரோட்டீன் சத்து அதிகரிப்போ அல்லது தடையோ தூக்க நிலையிலேயே நடக்கிறது.

எலிகளை வைத்து செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி மல்டிபில் செலெரொசிஸ் சுருக்கமாக (MS) எனும் மூளை நோய்.

விஸ்கான்சின் பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் சியர சிரேலி மற்றும் குழு தூக்கம் வர காரணமானது எது ? என்ற ஆய்வில் இறங்கினர். இறுதியில் இவர்கள் குழு ஒரு தீர்மானத்திற்கு வந்தது அதாவது மூளை நரம்பு செல்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்று மைலின் (Myelin) என்பது.

img1111418685z
அல்ட்ரா வயலெட் கதிர்கள் மற்றும் மன அயற்சியால் பாதிப்படைந்த உடற்செல்களின் கட்டுமானம் மற்றும் செறிவூட்டலுக்கு புரோட்டீன் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோட்டீன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு காரணி மைலின்.
இந்த மைலின் அதிகரிதலோ குறைவோ (Oligodendrocytes) தூக்கத்தை இழக்க வைக்கிறது அல்லது இரட்டிப்பாக்குகிறது.

multiple-sclerosis-demyelinization
ஆழ்நிலை தூக்கத்தில் ஏற்படும் கனவுகளுக்கும் இந்த மைலின் தான் காரணம். அந்த சமயத்தில் கண்களின் அசைவு அதிகமாயிருக்கும். (இது தூக்கத்தில் இருப்பவருக்கு தெரியாது)

ஆழ்நிலை தூக்கம் சுருக்கமாக ரெம் (REM = RAPID EYE MOVEMENT) ஜீன்களில் பதியப்பட்ட ஒன்று என்கிறார்கள். அதாவது கடிகாரத்தில் அலாரம் செட் செய்வது போல என வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவருக்கு சாப்பிட சாப்பிட தூக்கம் வந்துவிடும். சிலருக்கு தயிர் சாதம் சாப்பிட்டவுடன். சிலருக்கு புத்தகத்தை எடுத்தவுடன் சிலருக்கு TV. ( அப்படியும் தூக்கமே வரவில்லை யெனில் மாந்திரீகரை தான் பார்கோனும் ! அவ்.. )
மல்டிபில் செலெரொசிஸ் (MS) எனும் மூளை சம்பந்தமான நோய் இது மைலின்(myelin) கட்டுப்பாட்டை குலைப்பது தொடர் தூக்கம் கெட்டு போவதால் ஏற்படுகிறது.(இது சீரியஸ் ஆன விசயம்) MS பாதிப்பு ஏற்றபட்டால் உடலின் இம்யூனல் சிஸ்டம் மூளை நுண்நரம்பு செல்களின் மைலின் கோட்டிங்கை உடைக்கிறது. அதே போல முதுகெலும்பிலுள்ள மைலின் கோட்டிங்கையும் உடைக்கிறது.

அதனால் சுகமான நித்திரை பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
source of news : BBC

(4054)

Leave a Reply

Top