ஐரோப்பாவில் வாகனங்களை சுயமாக கட்டுப்படுத்தும் முறை அறிமுகமாகவுள்ளது!

ISAஐரோப்பா முழுவதும் வாகனங்களுக்கு சுய வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்துவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு வருகிறது.

போக்கு வரத்து பாதுகாப்பு பொறுப்பாளர் Patrick McLoughlin இது பற்றி கூறுகையில், ஐரோப்பாவில் வருடாந்தம் 30 000 மக்கள் சாலை விபத்துக்களால் இறந்து வருகிறார்கள், அதை கட்டுப்படுத்த இந்த தொழில் நுட்பம் உதவும் என தெரிவித்தார்.

ISA என அழைக்கப்படும் இத் தொழில் நுட்பம், வாகனங்களில் வேகத்தை உணரிந்துகொள்ளும் கமெராக்களை பொருத்துவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். இக் கமெர்காக்கள் முன்னால் செல்லும் வாகனத்தின் வேகத்திற்கேற்பவும் சாலையில் செல்லக்கூடிய அதிவேகத்திற்கு ஏற்பவும் செயற்பட்டு, தானாகவே வாகனத்தின் தடைகளை பயன்படுத்தும்! (70 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமான வேகங்களில் இயங்கும் வாகனங்களில் இந்த கமெரா தானியங்கி முறையில் இயங்கும். இது செய்மதியுடன் இணைந்து செயற்படும்.) இது போக்குவரத்து சுதந்திரத்திற்கு எதிரானது என ஒரு சாரார் கூறிவருகின்றனர்.

(693)

Leave a Reply

Top