நாசாவின் எதிர்கால திட்டமும்; மனிதனும்

2030 வரைக்குமான நாசாவின் செயல் திட்டம்

நாசா தனது ஐம்பத்து ஐந்தாவது ஆண்டை கொண்டாடி வருகிறது. (துவக்கம் : ஜுலை28,1958) மனிதனை நிலவுக்கு அனுப்பியது தொடங்கி செங்கிரகத்திற்கு உலவியை (மார்ஸ் ரோவர்) அனுப்பியதோடு இன்னும் பல எதிர்கால திட்டங்களை வைத்திருக்கிறது.

லேடி (LADEE ) Lunar Atmosphere and Dust Environment Explorer

வரும் செப்டம்பர் 2013 ல் நிலவுக்கு லேடி ஆய்வகத்தை( அன்னிய பொருள் துருவி) அனுப்ப இருக்கிறது இது நிலவை 160 நாட்கள் சுற்றி நிலவின் காற்றுமண்டலம் மற்றும் தூசுமண்டல சுற்றுசூழலை ஆய்வு செய்யப் போகிறது.

மாவென் (MAVEN) Mars Atmosphere and Volatile Evolution Mission

இந்த ஆண்டிற்குள்ளாக (2013) செவ்வாய் வளிமண்டலம் மற்றும் அயன மண்டலத்தை ஆய்வு செய்யும் திட்டம். மேலும் செவ்வாயில் சூரியப் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வது. இத்திட்டதின் நோக்கம்.

Magnetospheric Multiscale Mission (2014)

புவி காந்தப்புல ஆய்வு : 2014கில் நான்கு விண்கலங்களை பூமியின் சுற்றுவட்டத்தில் நிலைநிறுத்தி பூமி மற்றும் சூரியன் இவற்றிற்கு இடையே யான காந்தப்புல செயல்பாட்டை ஆய்வு செய்வது.

New Horizons (2015)

2006 ல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் வரும் 2015 ஜீலை மாதத்தில் புளுட்டோ மற்றும் அதன் பனிகட்டி துணைக்கோளை நெருங்கி தகவல்களை அளிக்கும். புளூட்டோ பூமியில் இருந்து 3 பில்லியன் மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Juno ( 2016)

நொடிக்கு 19 மைல் வேகத்தில் பறக்கும் ஜூனோ பெரிய கிரகமான வியாழன் வரலாற்றை தூசி தட்டப் போகிறது. இது நடக்க இருப்பது வரும் 2016ம் ஆண்டில்.

இன்சைட் Insight (2016)

பெரிய துளையிடும் கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தை தோண்டி செய்யப்படும் ஆய்வு வரும் 2016 ல்.

TESS (2017) Transiting Exoplanet Survey Satellite

டெஸ் எனும் சாட்டிலைட் மூலம் பூமியை ஒத்த கிரகங்கங்களின் புள்ளி விவரங்களை இன்னும் தெளிவாக அறிவதற்காகவும், உடுமண்டல நட்சத்திரங்களை பற்றி மேலும் பல தகவல்களை சேகரிக்கும் திட்டம்.

சூரிய தீர்க்கசோதனை Solar Probe Plus (2018)

சூரிய தகவமைப்பு ஆய்வுப்பணி. இது 2018 ல் செயல் பாட்டிற்கு வர இருக்கிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி James Webb Telescope (2018)

பால்வெளி மண்டலத்தை மற்றும் கோள்கள் உருவாக காரணமாக இருந்த பெருவெடிப்பு நிகழ்வு பற்றிய மேம்படுத்தப்பட்ட ஆய்வு இது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக வரும் 2018ல்.

OSIRIS -Rex (2018) Origins Spectral Interpretation Resource Identification Security Regolith Explorer

பெரும் விண்கற்பாறைகளை (சிறுகோள் )ஆய்வு செய்யும் பணி. 1900 அடி நீளமான அஸ்ட்ராய்டை (1999 RQ36) நெருங்கி இயந்திர கைகள் கொண்டு அதில் இருந்து கனிமங்களை எடுத்துகொண்டு வருவது. இது நடக்க இருப்பது 2018ல் தொடங்கி 2023 குள்.

MARS Rover (2020)

2020 ல் செவ்வாய்க்கு ஒரு உலவியை அனுப்பி அங்கிருந்து கனிம மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு செய்வது. இது மனிதனை செவ்வாய்க்கு அனுப்பப்படுவதற்கான முன்னோட்டமாகவும் இருக்கும்.

Manned Mission to an Asteroid (2025)

அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்த ஒரு திட்டம், பெரும் விண்கற்பாறைக்கு மனிதன் இறங்கி ஆராய்ச்சி செய்வது. இதை 2021ற்குள்ளாக செயற்படுத்த நாசா திட்டம் வைத்துள்ளது. இது பல சவால்களை கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வரும் 2020ல் ஆரம்பித்து 2030 திற்குள்ளாக மனிதனை செவ்வாயில் குடியமர்த்துவது. இந்த கனவு திட்டத்தை அமெரிக்க நிச்சயமாக செயல்படுத்தும் என ஓபாமா உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பதினாறு ஆண்டுகளுக்குள்ளாக இதெல்லாம்…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதெல்லாம் சாத்தியமா?

img_09835412n

(2294)

2 thoughts on “நாசாவின் எதிர்கால திட்டமும்; மனிதனும்”

  1. Jaya Prakash says:

    isro thittam enna sar.

Leave a Reply

Top