நிராகரிக்கப்பட்ட அகதியொருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது எப்படி? – France

passport_slOFPRA மற்றும் CNDA வினால் முற்றாக அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நாட்டில் வாழும் தகுதியை இழந்துவிடுகின்றனர். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு செல்வதானாலும் அல்லது குடியேற்ற அனுமதி ((Immigrant Visa) கோருவதென்றாலும் அவருக்கு கடவுச்சீட்டு (passport) தேவைப்படுகிறது. அதை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை பார்க்கலாம்.

படி 01 :
OFPRA மற்றும் CNDA வினால் நிராகரிக்கப்பட்டவுடன் அவர்களிடம் மீழ் கோரிக்கை வைக்காது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், இறுதியாக அகதி அந்தஸ்துக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட (OFPRA வினது அல்லது CNDA) அத்தாட்சியுடன், ஃப்ரான்சின் வெளியுறவு அமைச்சிடம் (foreign ministry – ministère des Affaires étrangères) அலுவலகத்தில் உறுதிப்படுத்தி கையொப்பம் வாங்கவேண்டும். ( இது 15 நிமிடங்களில் செய்துகொடுக்கப்படும், முத்திரைச்செலவு அண்ணளவாக 50€)

OFPRA அல்லது CNDA வில் இன்னமும் உங்கள் விசாரணை நிலுவையில் இருக்கும் போது, கடவுச்சீட்டை கேட்க முடியாது.
ஆனால், OFPRA, CNDA இற்கு உங்கள் விசாரணைக்கோப்பை திரும்ப பெறுவதாக அறிவித்து, அவர்களால் அனுப்பப்படும் ஆவணமூடாக கேட்கமுடியும்.

படி 02 :
ஃப்ரான்சிற்கான இலங்கை தூதரகத்திற்கு சென்று, புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
பழைய கடவுச்சீட்டு இல்லாதவிடத்து, பழைக கடவுச்சீட்டு தொலைந்ததற்காக காவல் துறையிடம் முறையிட்ட பத்திரம் கோரப்படும். ( எப்போது தொலைந்திருந்தாலும், உங்கள் வதிவிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறையிட்டு ஒரு உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். தொலைந்த இடம் (ஃப்ரான்ஸாக இருத்தல் வேண்டும்), காலம் கேட்கப்படும்.)

படி 03 :
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து, கட்டணத்துடன் இலங்கை தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 2-4 மாத கால அவகாசத்தில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தில் கேட்கப்படும் ஆவணங்கள் :

  • உங்கள் பிறப்பு அத்தாட்சி பத்திரம்.
  • அடையால அட்டை, அடையாள அட்டை பிரதி, அடையாள அட்டை இலக்கம் (இருப்பின்)
  • பழைய கடவுச்சீட்டு, பழைய கடவுச்சீட்டு பிரதி, கடவுச்சிட்டு இலக்கம் (இருப்பின்)
  • OFPRA, CNDA வினால் இறுதியாக நிராகரிக்கப்பட்ட ஆவணமும், அதை ஃப்ரான்ஸ் வெளியுறவு அமைச்சிடம் உறுதிப்படுத்தியமைக்கான சான்றிதழும்.
  • 4 புகைப்படங்கள்.
  • கட்டணம் (110€ -280€). ( அடையாள அட்டை, பழைய கடவுச்சீட்டு என்பன இருப்பின் கட்டணம் குறையும்.)

உங்கள் உறவுகளில் யாரவது ஒருவருக்கு உதவக்கூடும் பகிருங்கள்… 

(995)

Leave a Reply

Top