வளர்ந்துகொண்டே சென்ற வினோத மனிதர் – Adam Rainer

adam-rainer-tamilஅடம் ரைய்னர் (Adam Rainer) ஒஸ்ரியாவில் 1899 இல் பிறந்த ஒரு வினோத நபர்.

தனது 18 ஆவது வயதிருக்கும் போது Rainer, முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்பதற்காக இராணுவத்தில் சேர அனுமதிகோரினார் அப்போது அவரது உயரம் 4அடி 6.3 அங்குலமாக (138cm) ஆக இருந்தமையால் நிராகரிக்கப்பட்டார். எனினும் தனது 19 ஆவது வயதில் மீண்டும் முயற்சித்தார் அப்போது அவரின் உயரம் 4அடி 8.3 அங்குலம்.

குள்ளமாக இருந்த Rainer இற்கு பொருத்தமே இல்லாமல் பாதங்கள் மட்டும் பெரிதாக இருந்தது! 18 வயதில் அவரின் பாத அளவு 43ஐரோப்பிய அளவில் (10 அமெரிக்க-ஆசிய‌ அளவில்) இருந்தது.
Rainer இன் 21 ஆவது வயதில் அவரின் பாத அளவு 53(/20) ஆக அதிகரித்தது. எனினும் அவரின் உயரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழவில்லை.
21 ஆவது பிறந்த நாளின் பின்னர் 32 வயதில் வைத்தியம் தொடங்கும் வரையிலான சாதாரண மனிதர்களில் உயர வளர்ச்சி நின்றுவிடும் அவ்காலப்பகுதியில் அவர் 4அடி 10 அங்குலம் வளர்ந்து 7அடி 2அங்குலத்தை தொட்டார்(218cm).

அவரை சோதித்த மருத்துவர்கள் அவரின் பியூட்டர் (pituitary) சுரப்பியில் கட்டி இருப்பதை அறிந்துகொண்டனர். அது தான அவரது துரித வளர்ச்சிக்கும் கண்பார்வை கோலாறுக்கும் காரணம் என்பதை கண்டறிந்த அவர்கள், அதை சத்திர சிகிச்சை மூலம் நீக்கினர். எனினும், அவரது வளர்ச்சி தொடர்ந்தது, ஆனால் முன்னைய வேகம் அல்லாமல்.

1950 இல் இறக்கும் போது 7அடி 8 அங்குலமாக (234cm) இருந்தார் Rainer.

(2603)

One thought on “வளர்ந்துகொண்டே சென்ற வினோத மனிதர் – Adam Rainer”

Leave a Reply

Top