பூமியில் ஒரு செவ்வாய்த்தரை! – Atacama Desert (+video)

Atacama Desert : அடாகாமா பாலைவனம்

பாலைவனம் (deserts) என்றால் அனைவருக்கும் தெரியும், மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்லாத வறண்ட பிரதேசம் பாலைவனம் எனப்படுகிறது. ( மக்கள் வாழ்வதற்கு உகந்ததல்லாத பனி படர்ந்த பிரதேசங்களும் சில ஆங்கில இதல்களால் குளிர் பாலைவனம் என அழைக்கப்படுவதுண்டு. ) இன்று உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் பற்றிய தகவலைப்பார்ப்போம்.

சகாரா பாலைவனம் (Sahara desert) அனைவும் கேள்விப்பட்டிருப்பீர்கள், உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் இதுவாகும்.
இங்கு வருடத்திற்கு வெறும் 2 மில்லி மீற்றர்களே மழை பெய்கின்றது.
ஆனால், நாம் இன்று பார்க்கப்போகும் சிலி (Chile) நாட்டிலுள்ள அடாகாமா பாலைவனத்தில் (Atacama Desert) . வெறும் 0.1 மில்லி மீற்றர்களே மழை பெய்கிறது! இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டும் என்றால் 600 மைல்கள் பரவியுள்ள இப்பாலைவனத்தில் சில பகுதிகளில் 400 ஆண்டுகளாக ஒரு துளி மழையேனும் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் வாழ்வதற்கே உகந்ததில்லாத இவ் இடம் விஞ்ஞானிகளிற்கு ஒரு சொர்க்க பூமியாக திகழ்கிறது!
ஆம், செவ்வாய் கிரகத்தை ஒத்த தரையமைப்பைக்கொண்ட இவ் தரையையே நாசா உட்பட்ட அனைத்து செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்பவர்கள் பரீட்சிப்பதற்கு பயண்படுத்துகிறார்கள்.

இவ் வறண்ட பூமியே, உலகின் சுத்தமான இயற்கை சோடியத்தை வழங்கும் பாரிய முதலாக உள்ளது.

கடும் வெப்பமும் குறைந்த முகில் மூட்டமும் கொண்ட இவ் பிரதேசத்திலேயே 2011 October 3 ஆம் திகதி முதல் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை தேடுவதற்கான 66 ரேடியோ தொலைனோக்கிகளை கொண்ட அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சுவார்ஷ்ய தகவாலாக, செவ்வாயில் (mars) பெறப்பட்ட தரை மாதிரியும் இந்தப்பாலைவனத்தின் தரை மாதிரியும் பல வகைகளில் ஒத்துப்போகின்றதாம்.

இங்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பண்டைய சமுதாயம் வாழ்ந்து அழிந்திருக்க கூடும் என நம்பப்படுகிறது; எனினும் விண்வெளி ஆராய்ச்சிக்கு பக்க பலமான இடமாகத்திகழ்வதால் அவ் ஆராய்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படவில்லை.

By : Chandran Pirabu

(3231)

Leave a Reply

Top