நண்பர்கள் எப்படி இருந்தார்கள்? – மூளைக்கு புதிர்கள்

tamil-puzzles

நூதன சாலை ஒன்றில் பண்டைய பொருட்கள் பற்றிய விவரணக்காட்சியை பார்வையிட நண்பர்கள் கு

ழாம் ஒன்று சென்றிருந்தது. அங்கு அவர்கள் எந்த ஒழுங்கில் அமர்ந்திருந்து பார்வையிட்டார்கள் என்பதை அறிவதற்கு நூதன சாலைக்கு செல்லாத தயாளன் விரும்பினான். ஆனால், அந்த நண்பர்கள் ஒருவரும் தெளிவாக தாம் இருந்த ஒழுங்கை சொல்லவில்லை.

அவர்கள் சொன்னது :
ஜீவா : எனக்கு முன்னுக்கு ஜெனோ இருந்தான்.
கோவா : நான் அரவிந்திற்கும் பிரபுவிற்கும் பின்னுக்கு இருந்தேன்.
பிரபு : நான் ஜதீஸிற்கும் ஜித்திற்கும் முன்னுக்கு இருந்தேன்.
ரணே : எனக்கு முன்னுக்கு கோவா, சுஜி மற்றும் ஜித் இருந்தார்கள்.
ஜித் : நான் ரணே,சுஜி மற்றும் ஹரிக்கு முன்னே இருந்தேன்.
ஹரி : எனக்கு முன்னுக்கு சுஜி, ஜதீஸ் மற்றும் ரணே இருந்தார்கள்.
அரவிந்த் : ஜீவாவிற்கு முன் நான் இருந்தேன்.
சுஜி : நான் ஜெனோ, கோவா மற்றும் அரவிந்திற்கு முன்னே இருந்தேன்.
ஜதீஸ் : எனக்கு முன்னே ஜீவா இருந்தான்.

ரணே; ஜெனோவிற்கும் ஹரிக்கும் முன்னால் இருந்ததை அங்கிருந்தை ஜித் சொன்னான்.
ஜீவா; அரவிந்திற்கும் பிரபுவிற்கும் ரணேக்கும் பின்னால் இருந்தான் என்பதை சுஜி சொன்னான்.
கோவா; ஜீவாவிற்கு முன்னாலேயே எப்போதும் இருப்பான்.
சுஜி; பிரபுவிற்கு பின்னாலேயே எப்போதும் இருப்பான்.

இவர்கள் சொன்னதையும், அவர்களின் வழமையான நடத்தைகளையும் கொண்டு தயாளனால் அவர்கள் இருந்த ஒழுங்கை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. முடிந்தால் நீங்கள் உதவுங்கள் பார்க்கலாம்.

தீர்வு :

முயற்சியின் பின்னர் கீழுள்ள பகுதிகளை விடுவித்து தீர்வை அறிந்துகொள்ளுங்கள்!

[wp-like-locker]

பிரபு
ஜித்
சுஜி
அரவிந்
கோவா
ரணே
ஜெனோ
ஜீவா
ஜதீஸ்
ஹரி

[/wp-like-locker]

[twitterlocker]

பிரபு
ஜித்
சுஜி
அரவிந்
கோவா
ரணே
ஜெனோ
ஜீவா
ஜதீஸ்
ஹரி

[/twitterlocker]

(2746)

Leave a Reply

Top