வெர்சாய் மாளிகை! – France பிரபல வரலாற்று தளம்

visit-places-france

ஃப்ரான்சின் பெருமைக்குரிய சரித்திரத்தையும், கலாச்சாரத்தினையும் பார்க்கும் போது வெர்சாய் நகரத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். சரித்திரத்தில் வெர்சாய் நகரம் 1038 ஆம் ஆண்டில் இருந்தே இடம்பெறுகிறது. ஒப்பீட்டளவில் வெர்சாய் நகரம் 13 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை முக்கிய நகராக விளங்கியது. பின்னர் வந்த அடுத்த நூறாண்டுகளில் அதன் முக்கியத்துவம் ஏதோ ஒரு காரணத்திற்காக இழக்கப்பட்டது.

பின்னர், 1575 ல் கோந்தி (Gondi) குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் வெர்சாய் வந்தது; தொடர்ச்சியாக 1622 ல் மன்னர் 13 ஆம் லூயியின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்னர், 1662 இல் 14 ஆம் லூயி மன்னர் பரிஸை மையப்படுத்தி இருந்த சாம்ராஜய்த்தை வெர்சாய்க்கு மாற்றினார். அதன் தொடர்ச்சியாக 15 ஆம் 16 ஆம் லூயி மன்னர்களால் பல கட்டிடங்களும் அலங்கார ஸ்தலங்களும் நிர்மாணிக்கப்பட்ட வெர்சாய் நகர சாம்ராஜ்ஜம் விஸ்தரிக்கப்பட்டது. இவர்கள் காலத்திலேயே பிரபல தேவாலயமான ” சென் லூயிஸ் ” கட்டப்பட்டது.

1777 இல் வனப்புமிகு அரச ஒபேரா இசையரங்கு கட்டப்பட்டது. அக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய அரங்காக விளங்கியது.
இவ் அரங்கில் 1789 ஆம் ஆண்டு 16 ஆம் லூயி அரசரை கெளவ்ரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதுவே அரச குடும்பம் சார்பாக இறுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியாகும். 6/8/1789 இல் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக வெர்சாய் அரச சாம்ராஜ்யம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது.

வெர்சாய் நகர மையத்தில் மிகப்பெரிய அரண்மனை அதி நுட்ப கட்டிட வேலைப்பாடுகளுடனும் அழகிய பூந்தோட்டத்துடனும் விசாலமான பிரதேசத்தில் அமைந்துள்ளது. பல்வேறுபட்ட வரலாற்று, இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இவ் அரண்மனை, ஃப்ரான்சில் முக்கிய சுற்றுலாப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது.

உத்தியோக பூர்வ தளம் : Site
புகைப்படங்கள் : Pictures
தள வரைபடம் :

View Larger Map

(2666)

Leave a Reply

Top