“தற்கொலை தீர்வல்ல!” – உலக தற்கொலை தடுப்புத்தினம்10th Sep

suicideஉலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day – WSPD) தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு (IASP) மற்றும் உலக சுகாதார‌ அமைப்பு (WHO) ஆகியன இணைந்து இந்த தினத்தை 2003 ஆம் ஆண்டில் இருந்து நினைவுகூர்ந்துவருகிறது.

உலகம் பூராவும் 40 செக்கன்களுக்கு ஒரு முறை என்ற ரீதியில் 3 000 நபர்கள் தினமும் தற்கொலை செய்துவருகிறார்கள். அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என அறியப்பட்டுள்ளது.
உலக சனத்தொகையில் யுத்தங்கள் மூலம் இறந்தவர்களை விட சுயமாக தற்கொலை செய்தவர்களே அதிகம் என ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன. தற்கொலை என்பது இறப்புக்களுக்கான காரணத்தில் 13 ஆவது இடத்தை வகிக்கிறது.

அதிக தற்கொலைகள் இடம்பெறும் பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகள் இனங்கானப்படுகின்றன. அதேவேளை, பதிவு செய்யப்பட்ட தற்கொலைகள் குறைந்த பகுதிகளாக லத்தீன் அமெரிக்காவும் ஆசியாவின் சில பகுதிகளும் அறியப்பட்டுள்ளன. (சீனாவில் 15-34 வயதிற்குட்பட்டவர்களின் இறப்புக்களில் பெரும்பகுதி தற்கொலையாகவே உள்ளது!)

இறப்பிற்கான முக்கிய காரணங்களாக அறியப்பட்டுள்ளவை :

 • தனிமை
 • வேலைப்பளு
 • உதவியின்மை
 • மனநோய் – மனத்தாக்கம்
 • சமூக தாக்கம் ( நிராகரிப்பு / ஒடுக்கம் )
 • போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமை
 • உணவுத்தேவை பூர்த்தியாகாமை
 • தண்டனைகள் ( சிறை / வீடு / பாடசாலை )
 • தவறுகள்

இத் தினத்தில் முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் :

 • downloadசமூக சேவை நிலையங்களில் தமது பிரச்சனைகளை பதிந்திருக்கும் நபர்களுடன் தொடர்புகொண்டு அவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை இனங்காணுதல்.
 • பாடசாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மன் நிலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களை உலவியல் கேள்விகள் மூலம் இனங்கண்டு அவர்களுக்கான தீர்வை வளங்குதல்.
 • வேலைப்பளுவுக்குள்ளாகுபவர்களுக்கு அவர்களின் உரிமை தொடர்பான சட்டங்களை எடுத்துரைத்து பளுவைக்குறைத்தல்.
 • மக்களிடையே தற்கொலைத்தாக்கங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தல்.
 • சிறைச்சாலைக்கைதிகளின் தேவைகளை இனங்கண்டு தீர்வு கானுதல்.
 • வீடு/ பாடசாலைகளில் துண்பம் அனுபவிக்கும் மாணவர்களை இனங்கண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்தல்.
 • தற்கொலை தீர்வல்ல என்பதை பல்வேறு முறைகளில் எடுத்துரைத்தல்.

நாம் செய்யக் கூடியவை :

 • எம்மோடு தற்கொலை தொடர்பாக பேசியவர்களுக்கு, வெற்றி பெற்றவர்களின் வாழ்வில் சந்தித்த போராட்டங்களை எடுத்துரைத்து அவர்களின் மன நிலையை மாற்ற உதவலாம்.
 • எம்மோடு இருப்போரில் தற்கொலை எண்ணமுடையவர்கள் என இங்காண்போரை சிறந்த உலவியல் மருத்துவரிடம் அல்லது ஆலோசகரிடம் கூட்டிச்செல்லலாம்.
 • இப்படி ஒரு விளிப்புணர்வு நாள் இருக்கிறது என்பதை சமூகத்தளங்களூடாக பகிரலாம்.

OUR FAN PAGE!

 

(1254)

Leave a Reply

Top