Forrest Bird (ஃபொரெஸ்ட் பேர்ட்) : செயற்கை சுவாசத்தின் தந்தை!

Dr. Forrest Bird

Dr. Forrest Bird

Forrest Bird (ஃபொரெஸ்ட் பேர்ட்) “Baby Bird” என செல்லமாக அழைக்கப்பட்ட இவர் இன்று உலகில் பலர் உயிரோடு வாழ்வதற்கு ஏது செய்தவராகவுள்ளார்.

1921 இல் அமெரிக்காவில் பிறந்தார் பேர்ட். முதலாம் உலகயுத்தத்தில் பங்கேற்ற விமானியின் மகனான பேர்ட், தந்தையின் தூண்டுதலின் உதவியுடன் தனது 14 ஆவது வயதிலேயே தனியாக விமானமோட்ட கற்றுக்கொண்டார். விமான ஓட்டத்தில் ஈடுபாடும் அதீத திறனும் கொண்டிருந்த போர்ட் இரண்டாம் உலகயுத்தத்தின் போது விமான ஓட்டிகளுக்கும் விமானங்களுக்கான தொழில் நுட்ப வல்லுனராக நியமிக்கப்பட்டார். இதன் விளைவாக போர்ட் பல்வேறு நவீனரக விமானங்களை ஓட்டிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நவீனரக விமானங்கள் சில் அதி உயரத்தில் பறக்கையில் விமானிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதை அனுபவமூடாக கண்டறிந்துகொண்டார் பேர்ட். இதனால் அதி உயரத்தில் பறக்கும் போது இயற்கையாக சுவாசிக்க முடியாத நிலையில் நிச்சயமாக செயற்கையான சுவாசக்கரிவி ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தீயாக எழுந்தது!

Bird&Obama

Bird&Obama

ஆனால், விமானியாக இருந்துகொண்டு தன்னால் இதை சாதிக்கமுடியாது என்பதை உணர்ந்துகொண்ட பேர்ட், தனது உயர் பதவியை விட்டெறிந்துவிட்டு மருத்துவப்படிப்பில் மாணவராக இணைந்துகொண்டார். நெஞ்சில் இருந்த தீர வேட்கையுடன் மனித உடல் இயங்கும் முறையையும் சுவாச முறையையும் சுவாசத்திற்குதவும் வேதியல் பொருட்கள் எவை என்பதையும் சிறிதும் சந்தேகமின்றி கற்றறிந்துகொண்டார். அதன் விளைவு செயற்கை சுவாச மண்டலம் தயாரானது!

ஆம், முதலாவது Bird ( ventilator இற்கு ஒத்த சாதனம்) சாதனம் உருவானது! விமானியாக விமானிகளுக்கு தீர்வு தேடிய பேர்ட் இறுதியில் தான் கற்ற மருத்துவ கல்வி கடும் மூச்சு தினறலால் பாதிப்புற்று உயிர் நீக்கும் ஜீவன்களை காப்பாற்ற பயன்பட வேண்டும் என்ற எண்ணத்திற்குள் இட்டுச்சென்றது.

இச்சாதனத்தின் செயற்பாடு பற்றி பேர்ட் எந்த வித சந்தேகமும் அல்லாதிருந்த போதும், சமுதாயம் சந்தேகம் கொண்டது. எனினும், செயற்கை சுவாசம் கொடுத்தால் மட்டுமே உயிர் பிளைக்க கூடும் என்ற நிலையில் சாவின் எல்லையில் இருந்தோரிடம் போர்ட்டின் சாதனத்தை பரீட்சித்துப்பார்க்க அனுமதி கோரப்பட்டது. அவர்களும் அதற்கு ஒப்புதல் அளிக்க, முன்னோட்டமே பலரது உயிரைக்காத்தது!

Ventilator

Ventilator

1967 இல் ” Bird Oxygen Breathing Equipment Inc” என்ற சொந்த நிறுவனம் மூலமாக தனது சுவாச சாதனத்தை சந்தைப்படுத்த ஆரம்பித்தார். ( பிற்காலத்தில் அவ் நிறுவனம் Bird Corporation என பெயர் மாற்றப்பட்டது.)

1972 இல் பிறந்த உடனே மூச்சுத்தினறல் ஏற்பட்டு இறந்துபோகும் குழந்தைகளின் உயிரைக்காக்கும் அளவிற்கு அவரது இயந்திரம் மேம்படுத்தப்பட்டது.

1980 களில் தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக மேம்படுத்தப்பட்ட நவீன ventilator சாதனம் உருவாக்கப்பட்டது. இது செயற்கை சுவாசத்திற்கு மட்டுமின்றி; அசுத்த இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சாதனமாகவும் இது செயற்பட்டது.

மருத்துவ வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்ட சாதனங்களில் பேர்ட்டின் ventilator இற்கு தனி இடம் எப்போதும் உண்டு!

பலரின் உயிரைக்காத்த/ காத்துக்கொண்டிருக்கும் பேர்ட்டின் வாழ்க்கை குறிப்பை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி :) 

(1499)

Leave a Reply

Top