ஜீ.டி நாயுடுவின் கண்டுபிடிப்புகள்

தொடர்புடைய பதிவுகள்   (பகுதி 1 )             (பகுதி 2 ) 

விளைச்சல் விநோதம்

துவரை,வாழை,ஆரஞ்சு,பப்பாளி இவைகளில் இஞ்சக்சன் ஊட்ட மருந்து முறையில் பல புதிய கண்டுபிடிப்புகளை செய்தார். (குட்டை ரக) விதையில்லா ஆரஞ்சு, பப்பாளி இன்றைக்கும் விவசாயிகள் மத்தியில் ஒரு ஆச்சர்யமான விளைச்சல்.
வாழைப்பழம் போல் ஆரஞ்சை தோலுரித்து அப்படியே சுவைக்கலாம்(விதை இல்லை)

image403492

 

 

 

 

 

 

 

 

“திருமதி.லக்ஷ்மிபாய் அம்பேத்கர்,திரு.அம்பேத்கர்,திரு.ஜி.டி.நாயுடு”

அவருடைய கோபால் பாக் இல்லத்தில் 18-1/2 அடி உயர சோளச்செடி 26 கிளைகளுடன் 39 கதிர்கள் உருவாக்கி அசத்தினார். 11 அடி உயரம் வளர்ந்த ராட்சச பருத்தி செடி 24 ராத்தல் பருத்தியை கொடுத்தது. ஜெர்மானியர் இதற்கு “நாயுடு காட்டன் “ என்று பெயர் வைத்தனர். இந்த டெக்னாலஜியை ரகசியமாக வைத்திருந்தார் ஆனால் ஒரு கட்டத்தில் அமெரிக்க பல்கலைக் கழக நண்பருக்கு தொழில் ரகசியத்தை சொல்லி விட்டார். நினைத்திருந்தால் பெருந் தொகைக்கு அந்த இரகசியத்தை விற்றிருக்கலாம்.

06
பின்புலத்தில் 15 அடி உயர தினை மற்றும் 11 அடி உயர பருத்தி செடி

ஒரு துவரை செடி ஆறடி உயரமும் எட்டு அவுன்ஸ் துவரையும் கொடுக்கும் ஆனால் நாயுடு வளர்த்த செடி ஒரு மரமாக வே வளர்ந்தது அது 65 அவுன்ஸ் துவரை கொடுத்தது.

ராட்சச செடிகளை பார்த்து பிரமித்த சர்.சி.வி.ராமன் இது “தாவரவியல் விநோதம் (Botanic marvels) ” என்று குறிப்பிட்டார்.
“மினி கார்”

இந்தியாவிலேயே முதன் முதல் எலெக்ட்ரிக் மோட்டார் உற்பத்தி தொழிற்சாலை இவரால் ஆரம்பிக்கப்பட்டது(நேஷனல் எலக்ட்ரிக் ஒர்க்ஸ்). பல தொழில் ஸ்தாபனங்கள் இவரை பின்பற்றின. தற்போது வரைக்கும் கோவையின் மோட்டார் பம்பு செட்டுகளுக்கு வடநாட்டில் கிராக்கி உண்டு முக்கிய காரணம் அதன் உழைப்பு மற்றும் தரம்.

அரசாங்க அனுமதி அப்போது மறுக்கப்பட்டதால் வெளிநாட்டு கம்பெனிகளுடனான ஒப்பந்தங்களை இவர் நிறைவேற்ற முடியாமல் போனது. அப்போதே நானோ கார் ரகங்கள் (டாட்டா நானோ), அதிக மைல் ஓடக்கூடிய டயர்கள். மெசின் டூல்கள், ரேடியோ இப்படி பலதும் அடங்கும். ஆட்டோமொபைல் சம்பந்தமாக இங்கிலாந்தில் இருந்து இங்கு வந்து இவரிடம் குறிப்பு எடுத்து கொண்டு போனார்கள்.

தற்போதும் சொல்லப்படும் ஒரு கருத்து இந்நாடு ஒரு ஜீனியஸை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.
முனிசிபல் தேர்தலில் இருந்து பாராளுமன்ற தேர்தல் வரை போட்டியிட்டார். காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர் தேர்தல் முடிவு அறிவிக்கப் பட்டபின் நண்பருக்கு அனுப்பிய தந்தி “சக்ஸஸ்புல் டிபீட் இன் எலெக்‌ஷன்”  எதிர்த்து நிற்பவருக்கே ஓட்டு போடுங்கள் என்றால் இவர் எப்படி ஜெயிப்பது? அப்படிபட்ட வித்தியாசமான மனிதர்.

பல கருவிகளுக்கு இவர் பேடண்ட் உரிமை கோரவில்லை.

1948 லேயே பூமிக்கடியில் எலெக்ரிக் வயர்கள் (கன்சீல்ட்) இணைப்பு கொண்ட கட்டிடம் இன்றும் கண்காட்சியாக உள்ளது.

விருந்தின் முதல் சாப்பாடு இவருக்கே பரிமாரப்பட வேண்டும் ருசி இல்லாத உணவு விருந்தினருக்கு கொடுக்கப்படாமல் இருக்க இந்த ஏற்பாடு.

கண்டுபிடிப்புகள் :

நுணுக்கமாக அளவிடும் கருவி

இரும்பு சட்டத்தில் உள்ள நசுக்கல்களையும், வெடிப்புகளையும் கண்டறியும் கருவி (magno flux testing unit)

விநோத உருவம் காட்டும் கண்ணாடி பிளேட்டுகள்

மோட்டாரின் அதிர்வை சோதிக்கும் இயந்திரம் (auto vibrator testing machine)

காசை போட்டதும் பாடும் தானியங்கி இயந்திரம் (slot singing machine)

ஆரஞ்சு பிழியும் கருவி

மண்ணென்னையில் ஓடும் மின் விசிறி

radio-putcoin
<<”1952 ல் 70 ரூபாய்க்கு ரேடியோ”

கேமரா லென்ஸ் டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர்

எடிசன் செய்து பார்க்க முயன்ற ஒரு கருவி “வோட் ரெக்கார்டிங் மெசின்” அப்படி ஒரு கருவியை நாயுடு உருவாக்கிக் காட்டினார். இது தலையிட்டு கெடுக்க முடியாத (tamper-proof) பாதுகாப்பு தன்மை கொண்டது.

ஒரு அங்குலத்தில் இருநூறில் ஒரு பாகம் (1/200) அளவுள்ள மெல்லிய பிளேடு. இதற்கு நார்வே நாட்டு உருக்கு பயன்படுத்தப் பட்டது. இதை கொண்டு ஓர் ஆண்டிற்கு சேவ் செய்து கொள்ளலாம். நார்வே நாட்டு உருக்கை தருவிக்க அரசு அனுமதி தரவில்லை.

கையடக்க எலெக்ட்ரிக் ரேஸர்

நீரிழிவு நோய்க்கு ஒரு மருந்து

இது போல எண்பதிற்கு அதிகமான கண்டுபிடிப்புகள்.

PetrolcarbuiltbyGDNAIDU

 

டீசல் எஞ்சின், கார், ரேடியோ தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவ ஆசைப்பட்டார். அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்படியே கைவிடப்பட்டன.
பல்துறை வித்தகர் ஜீ.டி நாயுடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 

 

source of book : உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு by மெர்வின் (1985)
source of some photos: http://site4preview.in/gm/index.php

by Kalakumaran

(7283)

8 thoughts on “ஜீ.டி நாயுடுவின் கண்டுபிடிப்புகள்”

 1. RAJA GANDHEESWARAN says:

  AS USUAL OUR GOVERNMENT HAD LOST ONE GENIUS , WITHOUT KNOWING HIS FULL POTENTIAL

 2. Quality RO says:

  நானும் ஜி.டி நாயிடு சாரிடீஸ்'ல தானியங்கி சார்ந்த தொழில் படிப்பை 2004'ம் ஆண்டு 93வது பாட்ச் மாணவன் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இங்கு பதிவு செய்கிறேன்…

 3. Quality RO says:

  நானும் ஜி.டி நாயிடு சாரிடீஸ்'ல தானியங்கி சார்ந்த தொழில் படிப்பை 2004'ம் ஆண்டு 93வது பாட்ச் மாணவன்
  என்பதை பெருமகிழ்ச்சியுடன் இங்கு பதிவு செய்கிறேன்…

 4. V.r. Raja says:

  டீசல் எஞ்சின், கார், ரேடியோ தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவ ஆசைப்பட்டார். அரசின் அனுமதி மறுக்கப்பட்டதால் அப்படியே கைவிடப்பட்டன. பல்துறை வித்தகர் ஜீ.டி நாயுடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை….

 5. i am also g.d naidu institut studunt. 13 th batch i realy prowde

 6. Raj Kumar M says:

  வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

 7. Hari Haran says:

  very intelligent person.

Leave a Reply

Top