உண்மையான “மலர்” எது? | சிந்தனை புதிர்கள்

flower puzzleவெகு காலத்திற்கு முன்னர் சொலமன் என்ற அரசன் கிரேக்க நாட்டை ஆண்டு வந்தான். சிறந்த அறிஞரான அவருடைய புகழ் உலகெங்கும் பரவியிருந்தது.

சொலமனுடைய அறிவை சோதிக்க விரும்பினாள் எகிப்து அரசி சீபா. பல நாட்கள் பயணம் செய்து கிரேக்க நாட்டை வந்தடைந்தாள்.

சீபாவை சிறப்பாக வரவேற்றான் சொலமன்.
இருவரும் அங்குள்ள பூந்தோட்டத்தின் மத்தியில் இருந்த அறையில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

“எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும் தீர்க்கக்கூடியவர் நீங்கள் என்று உலகம் உங்களை புகழ்கிறது. உங்கள் அறிவை நான் சோதிக்கலாமா?” என்றாள் சீபா.

“சரி” என அதற்கு சம்மதித்தார் சொலமன்.

சீபா தன் அருகே நின்றிருந்த பணிப்பெண்ணின் பையில் இருந்து 3 மலர்களை எடுத்து அருகில் இருந்த மேசை மீது வைத்தாள்.

மூன்று மலர்களும் அளவிலும் வர்ணத்திலும் அழகிலும் ஒரே மாதிரி இருந்தன. அவற்றிற்குள் எந்த வேறுபாட்டையும் இனங்காண முடியவில்லை.

“அரசே! இந்த மூன்று மலர்களுள் ஒன்றுதான் உண்மை மலர், ஏனைய இரண்டும் போலியானவை. இவற்றில் எது உண்மை மலர் என்று கண்டறிய வேண்டியது உங்கள் பொறுப்பு…” என்றாள் சீபா.

சொலமன் அந்த மூன்று மலர்களையும் நன்றாக உற்றுக் கவனித்தார். அவரால், எந்த வேறுபாட்டையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்.

தன் அருகே இருந்த வீரனிடம் “னல்ல காற்று வரட்டும், ஜன்னல்களை திறந்துவிடு… ” என்றார். வீரனும் ஜனல்களை திறந்துவிட்டான்.

நீண்ட நேரம் மலர்களை பார்த்துக்கொண்டிருந்த சொலமன், ” நடுவில் இருக்கும் மலரே உண்மையானது” என்றார்.

இதைக்கேட்ட அரசிக்கு வியப்பு, எப்படி உண்மையை அறிந்துகொண்டார் என்று! அவரின் அறிவுக்கூர்மையை சீபா பெரிதும் பாராட்டினார்.

சொலமன் எப்படி உண்மை மலரை கண்டறிந்தார்?

தீர்வு :

முயற்சியின் பின் தீர்வை அறிந்துகொள்ள கீழுள்ள பகுதிகளை Like அல்லது Tweet செய்யவும்.

[wp-like-locker] பூந்தோட்டத்தில் பறந்துகொண்டிருந்த தேனீக்களில் ஒன்றாவது பூ மேல் அமராதா என்ற எண்ணத்தோடு ஜனல்களை திறந்துவிடும்படி காவலனை கேட்டுக்கொண்டார். சொலமன் எதிர் பார்த்தபடி அங்கிருந்த தேனீக்களில் ஒன்று மூன்று மலரையும் வட்டமிட்டு விட்டு நடுவில் இருந்த மலரில் அமர்ந்து தேன் குடித்தது!
உண்மை மலர் அது தான் என்பதை கண்டுகொண்டார் சொலமன். [/wp-like-locker]

[twitterlocker] பூந்தோட்டத்தில் பறந்துகொண்டிருந்த தேனீக்களில் ஒன்றாவது பூ மேல் அமராதா என்ற எண்ணத்தோடு ஜனல்களை திறந்துவிடும்படி காவலனை கேட்டுக்கொண்டார். சொலமன் எதிர் பார்த்தபடி அங்கிருந்த தேனீக்களில் ஒன்று மூன்று மலரையும் வட்டமிட்டு விட்டு நடுவில் இருந்த மலரில் அமர்ந்து தேன் குடித்தது!
உண்மை மலர் அது தான் என்பதை கண்டுகொண்டார் சொலமன். [/twitterlocker]

Facebook !

Thanks : Prof.N.Sothi

(3476)

5 thoughts on “உண்மையான “மலர்” எது? | சிந்தனை புதிர்கள்”

 1. kowsalya says:

  setiyil irunthu paritha malar enbadhal athika katrin karanamaga satru vadi irukum..

 2. siva says:

  jy hg

 3. Magentiran Nawamani says:

  காற்றில் பூவின் வாசம் பரவ, வாசத்தைத் தேடி வந்த வண்டுகள் இயற்கைப் பூவின் மேல் அமர்வதைக் கண்டு அறிந்து கொண்டான்…

  1. Prabu says:

   சரியான பதில் :)

   1. Deepika Rooby says:

    kaatradithal poovin idhazhgal asaiyum apozhudhu unamaiyan poo asaiyum vidhamum poiyana poo asaiyum vidhamum maarupadum adhai vaiththu kandu pdithiruppan easy

Leave a Reply

Top