இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 2 )

வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 1 )

தம் கண்டுபிடிப்புகளையே உடைத்தெறிந்த‌ தீரன்                            

ஒருசமயம் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களை கொண்டுவந்த போது ரூ.80,000/- வரி போடப்பட்டது. இதை எதிர்த்து அரசுடன் போராடினார். வசூலித்த வரி மிக அதிகம் என்றும் இல்லையெனில் அந்த மிஷின்களை உடைக்கிறேன் என்றார். ஆனால் எந்தவித பிரியோசனமும் இல்லை.

image0987<<படத்தில் பெரியாருடன்..
சென்னையில் அத்தனை இயந்திரப்பொருள்களையும் கண்காட்சி வைத்தார். தன் கருத்துக்களை முன்வைத்து உடைப்பதாக சொன்னார். கூட்டத்திற்கு வந்திருந்த ராஜிலு நாயுடு, காமராஜ், டாக்டர் சுப்பராயன் இவர்களெல்லோரும் அப்படி செய்யவேண்டாம் என வற்புறுத்தினர். அப்போது, உடைக்கும் எண்ணத்தை கைவிட்டார்
ஆனால் இயந்திரங்களை உடைக்கும் எண்ணம் அவர் உள்ளத்தை குடைந்து கொண்டே இருந்தது.
இன்னொரு சமயத்தில் இதே போன்ற கண்காட்சியில் அவர் திட்டமிட்ட படி இயந்திரங்களை உடைத்தார். கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகளை, பொருளை உடைப்பது என்பது எந்த ஒரு விஞ்ஞானிக்கும் இயலாத செயல். ஆக்கம் அழிவிற்கே என்ற சித்தாந்தத்தை உறுதிப்படுத்தினார்.
தன்னுடைய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வில்லையே என்ற ஆதங்கத்தின் விளைவே இது என்றாலும் அரசாங்கத்தை எதிர்க்கும் மனோபாவம் அவருக்கு இருந்தது அதை வெளிப்படையாக காட்டி போராடியவர் ஜி.டி.நாயுடு.
ஒரே அறையில் நான்கு பெண்கள்
புத்தாண்டு தினத்தில் சிகாகோ நகரில் எல்லாப்பகுதிகளிலும் ஒரே கொண்டாட்டமாக இருந்தது. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துவிட்டு தன் அறைக்கு திரும்பினார். அவர் தங்கியிருந்த அறைக்கு நான்கு பெண்கள் குடி போதையில் வந்து தொந்தரவு செய்தனர். அவர்களை வெளியே தள்ளி கதவை சாத்தினார். ஆனால் மீண்டும் ஜாமத்தில் வந்து ஏதேதோ பிதற்றி அவர் அறையில் வலுகட்டாயமாக நுழைந்து அங்கேயே தூங்கி விட்டனர். தூக்கம் வராமல் இரவு முழுவதும் விழித்திருந்தார். மறுநாள் காலை தெளிந்து தவறுக்கு மன்னிப்பு கேட்டனர்.
பிற்பாடு அவர்களில் ஒருத்தி அவரை மணந்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தாள். இந்தியரின் பழக்க வழக்கம் வேறு என சொல்லி மறுத்துவிட்டார்.
அதே போல ஜெர்மனி தொழிற்சாலையில் இருந்த ஒரு பணக்காரப் பெண்மனி மூன்றாவதாக இவரை மணக்க விருப்பப்பட்டார். அந்த வெளிநாட்டு பெண்கள் “இந்திய கணவர்கள் அன்பானவர்கள்..பண்பானவர்கள் ” என நினைத்திருக்கலாம். இந்த பெண்மனியின் விருப்பத்திற்கும் அன்புடன் மறுத்து விட்டார்.

imshr01
கழுத்தில் மாலையுடன் இருப்பவர் சர்.ஆர்தர் ஹோப் அருகில் ஜி.டி.நாயுடு
அப்போது துவக்கப் பட்ட ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் பின்னாளில் கோவை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரி ஆனது. இந்த கல்வி நிலையத்திற்காக கட்டிடங்கள் மற்றும் பொருள் உதவிகள் பல செய்தவர் ஜி.டி.நாயுடு.
புத்தகப் பித்தர்


நாயுடுவுக்கு புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். வெளிநாட்டு பத்திரிக்கைகள் படிப்பார் தேவையான தகவல்களை குறிப்பு எடுத்து கொள்வார். நூல்களை போல் வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள் இல்லை என்பது அவர் கருத்து. படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் போவார். ஒருசமயத்தில் 80 ஆயிரம் மதிப்புள்ள 30,000 நூல்கள் இருந்தது. புத்தகங்களையும் பத்தாயிரம் ரூபாய் நன்கொடையையும் கோவை நகராட்சிக்கு கொடுத்தார். (புத்தகங்களை அவர்கள் வாங்கி கொண்டார்களா என்பது தெரியவில்லை)
இளவயதில் இவர் பாட புத்தகங்களை வெறுத்தவர். படிப்பின் மேல் நாட்டம் இல்லாதவர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
அரசுக்கு அநியாய வரி கட்டுவதை எதிர்த்த அவர் கல்விக்காகவும் தொழில் அபிவிருத்திக்காகவும் நன்கொடை அளித்தார். போர்காலத்தில் அரசுக்கு யுத்த நிதியும், யுத்த நிதி பத்திரங்களில் முதலீடும் செய்தார்.

image-098465
கோவையில் தொழிற்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தி நடத்துவதில் இவர் முன்னோடி. குறுகிய காலங்களில் (short term certificate course) படித்து முடிக்கும் தொழில் கல்வி முறையை புகுத்தினார் .தனது மகன்(கோபால்) அவர்களுக்கும் தொழிற் கல்வியையே படிக்க வைத்தார். தொழிற்கல்வி ஒன்று தான் இந்தியா முன்னேற வழிவகுக்கும் என்பதோடு அதை செயலிலும் நிறுபித்தார்.
இன்னும் பல சுவாரசிய தகவல்களுடன் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.

(3010)

One thought on “இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு வாழ்க்கை சம்பவங்கள் (பகுதி 2 )”

Leave a Reply

Top