முதல் குகை ஓவியம்

புதை பொருள் ஆராய்சியாளருக்கு ஒரு பொருள் கிடைத்தால் அது எந்த காலத்தை சேர்ந்ததது என்பதை உறுதிப் படுத்துவதே பெரும் சவால். அதிலும் ஒரு கற்கால ஓவியம் கிடைத்தால் (அதை சிதைக்காமல்..?!) அதைப் பற்றிய காலத்தை வரையறுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஆய்வுக்கூடத்தில் சோதிக்க முடியாது ?!. பாறை ஓவியங்கள் காலத்தாலும் தட்பவெப்ப சூழ் நிலைகளாலும் மழை வெயில் இவற்றாலும் பாதிப்பு அடைகிறது.

ரேடியோ கார்பன் மற்றும் தெர்மோலுமினெஸென்ஸ்[ thermoluminescence (TL) ]எனும் தொழில் நுட்பத்தின் மூலம் புதைபொருளின் காலத்தை நிர்ணயிக்கிறார்கள்.

தென்மேற்கு நமீபியாவில் ஹன்ஸ் சிகரத்தில் இரண்டு துண்டுகளாக உடைந்து போன ஓவியப் பலகைகளை கண்டு பிடித்தார்கள். இது தான் காலத்தின் முந்திய முதல் ஓவியம் அப்படின்னு முடிவு செஞ்சாங்க. இதோட காலத்தை 26300 முதல் 28400 (B.P) இருக்கலாம்னு சொல்றாங்க. இந்த கற்பலகைக்கு “அப்போலே 11 ” அப்படின்னு பேர் வைச்சாங்க ( Appollo பறந்த சமயமா ? !). இது கரி துண்டு, மற்றும் மண்நிறமி(Ocher), சுண்ணாம்பு கொண்டு வரைந்து இருக்காங்க. ஆப்ரிக்க கண்டத்தில கண்டுப்பிடிச்ச பழமையான ஓவியம் இது.

image_0657 image_2398

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆனால் ப்ளும்பாஸ் குகையில் (South Africa)ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் மேல் வரைபட டிசைன் போல இருக்கிறது.

 

 

இது சுமார் 70000 முதல் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும்னு இது பற்றிய ஆய்வு செஞ்ச க்ரிஸ் ஹென்சில்வுட் என்பவர் தெரிவிக்கிறார். (கண்டுபிடிப்பு 2008 ல்)
இந்த கண்டுபிடிப்பு என்ன உணர்த்துன்னா மூதாதை இனமான ஹோமேஸேப்பியன்கள் அறிவுக்கூர்மையானவங்க அவங்களுக்கு வேதியல் , ஜியோமெட்ரிக் எல்லாம் தெரிஞ்சிருக்கு என்கிற முடிவுக்கு வரமுடியும்.

மேலும் இந்த ஆய்வில் கிடைத்த பொருள்கள் கரி படிந்த கடற்சிப்பி (இதிலதான் வண்ணங்கல கலக்க பயன்படுத்தி இருக்காங்க,) எலும்பு துண்டு கலக்கி, சுண்ணாம்பு கட்டிகள்.
இன்னொரு தகவல்,  வண்ணகலவைக்கு சிறுநீரை பயன்படுத்தியிருக்காங்க.

(2204)

Leave a Reply

Top