உலகம் வியக்கும் இந்தியாவின் பழமையான தூண்!

image-843 img-89421600 ஆண்டுகள் பழமையான இந்த இரும்புத்தூண் இந்தியர்களின் திறமைக்கு அறிவியல் தொழில் நுட்பத்திற்கு கட்டியம் கூறுகிறது.

இந்த இரும்புத்தூண் சுமார் 24 அடி (7.2 மீட்டர்) உயரம் இதனுடைய எடை ஆறு டன் இதனுடைய அடிப்பாகம் நிலத்தினுள் ஒரு மீட்டர் இருக்கும்ங்கராங்க. இத்தூணில் சமஸ்கிருத வாசகங்கள் பிராமி எழுத்துகளை கொண்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
குத்புதீன் டெல்லியில் கட்டிய முதல் மசூதி குவ்வாத்-அல்-இஸ்லாம் சுமார் 23 இந்து, ஜைனக் கோயில்களை இடித்து உடைந்த பகுதிகளால் கட்டப்பட்டதே. இந்த பகுதியில் தான் இந்த இரும்புத்தூண் கம்பீரமாய் நிற்கிறது.

இந்த இரும்புத்தூணின் வரலாற்றை இன்னும் பின்னால போய் பார்த்தோம்னா இது இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தியரால் கி.பி.402 ல் செய்யப்பட்டது. இது அப்போதைய உதய கிரியின் (Vishnupadagiri) விஷ்ணு கோயிலின் எதிரில் இருந்த கொடிமரம். தூணின் உச்சியில் கருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னாளில், அதாவது 10ம் நூறாண்டில் தற்போது இருக்கும் பகுதிக்கு ராஜபுத்திர அரசர் ஆனங்பாலினால் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. இந்த இடத்திலும் விஷ்ணு கோயிலின் முன்னால் கம்பீரமான கொடிமரமாக இருந்தது.

இருந்துட்டு போகட்டும், ஆனால் இன்னும் இந்த தூணின் துருப்பிடிக்காத அதிசயம் தான் உலகத்தை ஆச்சர்யப்படுத்துவதாகவே இருக்கிறது.

கான்பூர் ஐ.ஐ டியை சேர்ந்த வல்லுனர்கள் இந்த தூண் துருப்பிடிக்காததன் காரணத்தை ஆராய்ந்தார்கள். கடினமான ஒரு முலாம் பூச்சு இதனை துருவில் இருந்து தக்கவைத்து இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் இதில் உள்ளீடு செய்யப்பட்ட பாஸ்பரஸின் (phosphorous) கலப்பு தன்மையே துருப்பிடிக்காத தன்மையை அதற்கு தருவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். ( இதை பற்றிய விரிவான ஆய்வு புத்தகம் 2001 ல் வெளியாகி இருக்கு Delhi iron Pillar new insights by R.Balasubramaniam )

முக்கியமாக இதை உருவாக்கும் போது கடைபிடிக்கப்பட்டிருக்கும் வார்பட டெக்னாலஜி ஒரு பெரும் ரகசியத்தை நமக்கு சொல்வது என்னன்னா ? அது இந்தியர்களின் “புத்திக்கூர்மை”

இதே வகையை சேர்ந்த பிரம்மாண்ட இரும்புத்தூண்கள் மத்தியபிரதேசத்தின் தார் மாவட்டத்தில் லாட் மசூதியில் (The Lat Masjid ) காணக் கிடைக்கின்றன. (லாட் = தூண்)

Iron_pillar_Dhar
அந்த கால கட்டங்களில் இந்தியாவில் இருந்து போர்வாள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அலெக்ஸாண்டருக்கு போர்வாள் பரிசு அளிக்கப்பட்டுள்ளதாக வரலாறு.

மேலும் குத்புதீன் பற்றி சில தகவல்கள் :

இஸ்லாமிய மதத்தை இந்தியாவில் பரப்புவதில் முழுமூச்சாக இருந்தவர் சுல்தான் குத்புதீன் அய்பெக். இவரால் உடைத்து தள்ளப்பட்ட இந்துக் கோயில்கள் ஏராளம். இப்படி இடிக்கப்பட்ட கோயில்களின் தூண்களையும் படிக்கற்களையும் கச்சிதமாக மசூதி கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார்.

குத்புதீன் துருக்கிய இனத்தை சேர்ந்தவன். அடிமையாக ஒரு வியாபாரிக்கு விற்க்கப்பட்டவன். முகமது கோரியின் கண் பார்வையில் பட்டு குதிரை படை பிரிவில் தலைவனான், பின் பிரதம தளபதியாக உயர்ந்தான். பின்னாலில் கோரியால் பிரதி நிதியாக அமர வைக்கப்பட்டு அடிமைகளின் சாம்ராஜியத்தை நடத்தி காட்டியவர் குத்புதீன். கோரி ஆப்கானிஸ்தானுக்கு போகும் வழியில் மர்மமாக கொல்லப் பட்டார்.

குத்புதீன் நான்கே வருசம் ஆட்சி செய்தான் எதிர்பாரத விதமா, விளையாட்டின் போது குதிரையில் இருந்து எசகு பிசகா வீழ்ந்து இறந்தான். குதுப்மினாரின் முதல் அடுக்கு இவரால் எழுப்பப்பட்டது.

எத்துணையோ பிரம்மாண்ட மாளிகைகள் இருந்த இடம் தெரியாமல் போக வரலாற்றில் ஒரு அடிமையால் நிறுவப்பட்ட குதுப்மினார் இன்றைக்கும் அவர் ஆட்சியின் சாட்சியாக இருக்கு.

(4184)

Leave a Reply

Top