சித்திர விளைவு! – Photoshop tamil tutorials 2013 – 2

இறுதியாக மங்களான புகைப்படத்தை தெளிவாக்குவது எப்படி என பார்த்திருந்தோம். இன்று சாதாரண புகைப்படத்தை கீறிய புகைப்படம் போன்று எப்படி ஃபோட்டோஷொப் பில் மாற்றுவது என்பதை பார்ப்போம்.

முதலில் ஃபோட்டோஷொப்பில் ஒரு புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். (Ctrl + O) அல்லது சுட்டி (Mouse) மூலமான இரு சொடுக்குமூலம்.

Open Image

Open Image

பூட்டப்பட்டுள்ள Layer ஐ இரு சொடுகல் மூலம் திறந்துகொள்ளவும்.

Unlock Layer

Unlock Layer

புதிதாக ஒரு நகல் Layer ஐ உருவாக்கி கொள்ளவும். (Right Click -> Duplicate Layer)

படத்தில் காட்டியது போன்று Drag&Drop மூலமும் புதிய Layer ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

Duplicate Layer

Duplicate Layer

நகல் எடுக்கப்பட்ட Layer ஐ தெரிவு செய்துவிட்டு, Ctrl+Alt+Shift+B ஐ அழுத்தி கறுப்பு வெள்ளையாக்கும் பகுதிக்கு செல்லவும், அங்கு எந்த மாற்றமும் செய்யாமல் Ok வை அழுத்தவும்.

Black & White effect

Black & White effect

இப்போது அதே Layer இல் Ctrl+L அழுத்தி “Auto” வை அழுத்தி பின்னர் Ok வை அழுத்தவும்.

Level Correction

Level Correction

மாற்றங்கள் செய்யப்பட்ட லேயரை இன்னோர் முறை நகல் எடுக்கவும். (Duplicate Layer இன் செய்முறை)

Duplicate Layer

Duplicate Layer

புதிய நகலை தெரிவு செய்து Ctrl + I ஐ அழுத்தவும். கீழுள்ள படத்திலுள்ளது போன்று மாறி இருக்கும்.

Invert Image

Invert Image

அடுத்து Filter -> Blur ->Gaussian Blur ஐ சொடுகவும்.

Blur Option A

Blur Option A

அங்கு Radius பகுதியில் குறைவான பெறுமதியை கொடுக்கவும். (2,5-9)

Blur Option B

Blur Option B

அடுத்து Layer Style ஐ Color Dodge ஆக மாற்றவும்.

Layer Style

Layer Style

மேலும் தெளிவான மாற்றத்திற்கு Ctrl+Shift+E ஐ அழுத்தி லேயர்களை ஒன்றினைத்த பின்னர், Ctrl+L ஐ அழுத்தி அதிலுள்ள கருமை-வெண்மை அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். ( அவதானம்! : லேயர்களை ஒன்றினைத்து பதிந்துகொண்டால் பின்னர் பிரிக்க முடியாது. )

இறுதியில்…

Bill-Gates-9307520-1

புதிய கற்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் எம்மோடு இணைந்திருங்கள் :)

(2346)

2 thoughts on “சித்திர விளைவு! – Photoshop tamil tutorials 2013 – 2”

  1. எளிமையான விளக்கங்கள் படத்துடன்! நன்றி!

Leave a Reply

Top