கண்தெரியா சாதனையாளர்கள்! (+Video) – Part 01

Marla Runyan

Marla Runyan

ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த கண்தெரியாத பெண்!

மார்லா ருன்யன் ( Marla Runyan) 9 வயதாக இருக்கும் போதே Stargardt’s Disease எனும் நோய்காரணமாக கண் பார்வையை இழந்தவர். எனினும் 1987 இல் பல்கழைக்களகத்தில் கல்வி கற்கத்தொடங்கிய இவரிற்கு, அங்கு விளையாட்டுத் துறையில் பல் வேறு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. அவை அனைத்திலும் திறமையை வெளிக்காட்டிய இவர் முதல் முதலாக 1992 ஆம் ஆண்டு நடைபெற்றா பரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டார். அதில் கண் தெரியாமல் ஓடியும் தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். அடுத்த ஒலிம்பிக்கிலும் (1996) வெள்ளிப் பதக்கத்தை வெற்றியீட்டினார்!

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 1500 மீட்டர் ஓட்டத்தில் 8 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார். எனினும் பார்வை தெரியாது ஒலிம்பி போட்டியில் சாதித்த முதல் பெண் இவர் எனும் பெருமை இவருக்கு உண்டு!

அவர் பங்கு பற்றிய ஒரு ஓட்டக்காட்சி :

 

Derek Rabelo

Derek Rabelo

பார்வையற்ற அலை சாகாச வீரர்!

பிரேஷிலைச் சேர்ந்த Derek Rabelo (டெர்க் ரபெலொ) பிறக்கும் போதே congenital glaucoma (பிறவி பசுபடல நோய்) எனும் பார்வைக்கோளாரால் பாதிக்கப்பட்ட இவர், தனது 3 வயதில் இருந்து அலைகளில் சாகாசம் புரியும் பயிற்சியை மேற்கொள்ளத்தொடங்கியுள்ளார். 20 வயதில் பல சாகாசங்களை செய்யத்தொடங்கிய இவர் பற்றிய ஆவணப்படத்தை கீழே காணலாம்.

“கடவுளின் துணையுடன் எதுவும் சாத்தியம்” என்க்கூறும் இவருக்கு தேவாலயம் பல்வேறு வளிகளில் உதவி வந்துள்ளது.

(2099)

Leave a Reply

Top