1 மில்லியன் டொலர் பரிசை நிராகரித்த கணிதமேதை! – Grigori

Grigori Perelman

Grigori Perelman

2003 ஆம் ஆண்டு ரஷ்ய கணிதவியலாளரான Grigori Perelman (கிரகெரி பார்ல்மன்) என்பவர், சுமார் 100 ஆண்டுகளாக விடுவிக்கப்படாதிருந்த பியான்கேரி (Poincaré) அனுமானங்களில் ஒன்றை விடுவித்தார்! 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தார்.
7 பேர் இந்த புதிருக்கான சான்றுகளை சமர்ப்பித்திருந்தாலும், Cambridge பல்கழைக்களக கணிதவியலாளர்களைக்கொண்ட குழு ஒன்று சுமார் 7 வருட கால உறுதிப்படுத்தலின் பின்னர் கிரகெரியை வெற்றியாளராக 2010 இல் அறிவித்தது!

இப் புதிரை விடுவித்தவருக்கு கணிதத்துறையில் நொபல் பரிசுக்கு நிகரான பரிசும் சுமார் 1 மில்லியன் டொலர் ரொக்கப்பணமும் கொடுக்கப்படுவது முறை. அப்பரிசு கிரகெரிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், அதை வாங்குவதற்கு அவர் மறுத்துவிட்டார்!

“வெற்றிடங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன அவற்றை கணித்து தீர்க்க முடியும் என்பதே எமக்கு சிறந்த வாய்ப்பு. என்னால் இந்த பிரபஞ்சத்தையே கணித்து கட்டுப்படுத்த முடியும். பிறகு எதற்காக நான் பணத்திற்காக ஓட வேண்டும்?” என்ற கேள்வியுடன் மில்லியன் டொலர் பெறுமதியான பணத்தை நிராகரித்தார்.

இத்தனைக்கும் 45 வயதான கிரகெரி தனது தாய் மற்றும் சகோதரியின் வீட்டில் வாழ்ந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

(1812)

One thought on “1 மில்லியன் டொலர் பரிசை நிராகரித்த கணிதமேதை! – Grigori”

  1. Yoseph says:

    Grigori Perelman-தான் என்னால் இந்த பிரபஞ்சத்தையே கணித்து கட்டுப்படுத்த முடியும் என்கிறாரே இவரால் கால பயணத்தை நிகழ்த்த முடியுமே.

Leave a Reply

Top