வெண் தேவாலயம். (Sacré Coeur / White Church)

paris-visitsபரிஸ்-மொன்மார்த் (Montmarte) மலை உச்சியில் அமைந்திருக்கும் தேவாலயம், வெண்கற்களால் கட்டப்பட்ட கண்களைக்கவரும் ஓர் அதி அற்புத கட்டிடக் கலை நுட்பம் நிரம்பிய தேவாலையம் இதுவாகும்.

1870/71 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பரிஸ் கொம்யூன் எழுச்சியின் போது இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களுக்கு பிராய்ச்சித்தமாக இத் தேவாலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாராளுமன்றத்தால் 1873 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 1876 ஆம் ஆண்டில் இத்தேவாலயத்தின் கட்டிட வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு 1919 இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. நான்கு சிறிய கூம்பக வடிவிலான கோபுரங்களையும், நடுப்பகுதியில் பெரிய கோபுரத்தையும் கொண்டுள்ள இவ் ஆலயத்தின் பின் பகுதியில் 94 மீற்றர் உயரமான மணிக்கூட்டு கோபுரம் அமைந்துள்ளது. உலகில் மிகப்பெரிய மணிகளில் ஒன்றான19 தொன் நிறையுடைய மணி ஒன்றும் கோபுரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இத் தேவாலயத்தின் உட்பகுதியில் இருந்து படிகள் மூலம்; சுமார் 475 மீற்றர் விசாலமான நிலக்கீழ்த்தளத்திற்கு செல்ல முடியும். உள்ளே தீட்டப்பட்டுள்ள சித்திரங்களும், சிற்பங்களும், ஒளித்தெறிக்கும் கண்ணாடி வேலைப்பாடுகளும் வியப்பூட்டும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்திற்கு வெளியே நின்று பரிஸ் நகரின் வனப்பை பல கிலோமீட்டர் தூரத்திற்கு பார்த்து ரசிக்க முடியும்.
மலை உச்சியில் இருக்கும் இத்தேவாலயத்திற்கு படிக்கட்டுகள் மூலமாகவோ தானியங்கி சாதனங்கள் மூலமாகவோ சொல்ல முடியும்.

புகைப்படங்கள்.
உத்தியோக பூர்வ தளம் : www.sacre-coeur-montmartre.com/
இருப்பிடம்.

Agrandir le plan

(1618)

One thought on “வெண் தேவாலயம். (Sacré Coeur / White Church)”

Leave a Reply

Top