சாம்ஸ் எலிசே (Champs Elysées) பிரதான சாலை! – சுற்றுலாதளங்கள் FRANCE

arc-de-triomphe-tamilபரிஸின் மேற்குப்பகுதியில் செயின் (Seine) நதிக்கு வலது புறமாக அமைந்துள்ளா சாம்ஸ் எலிசே பிரதான சாலை உலகின் மிக அழகான பிரதான சாலை என வர்ணிக்கப்படுகிறது.
இது பரிஸின் வெற்றி வளைவிற்கும் (Arc de Tricomphe) கொன்கோட் (Concorde) இற்கும் இடையில் அமைந்துள்ளது.
அன்ட்று லு நோர்த் (Andre le Nôtre) என்ற கட்டிட கலைஞரினால் 1670 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.

ஆடி 14 இல் (14/8) பிரெஞ்சு குடியரசு தினக்கொண்டாட்டங்களின் போது, இவ் வீதியில் சகல இராணுவப் படையினரின் அணிவகுப்புகளும் நடைபெறும். 1789 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இந்த வீதி மிக முக்கியம் பெற்றது.

இன்று மிகப் பெறுமதிவாய்ந்த பிரதேசமாக கணிக்கப்படும் இந்தப் பகுதியில் தேசிய-சர்வதேசிய நிறுவனங்களின் அலுவலகங்களும், ஆடம்பரமான வர்த்தக நிலையங்களும், உணவங்களும், திரை அரங்குகளும், விமான சேவை நிறுவங்களும் உள்ளன.

2000 ம் ஆண்டுகளில் பரிஸ் மாநகர சபை, மரங்கள் நட்டும், நடைபாதைகளை விஸ்தரித்தும் இப் பெரும் வீதியின் பார்வையாளர்களுக்கான வசதியை அதிகரித்துள்ளது.

புகைப்படங்கள் : Link
உத்தியோக பூர்வ தளம் : www.champselysees-paris.com/
இருப்பிடம் :


Agrandir le plan

(1149)

Leave a Reply

Top