மனித பரிமாண அருங்காட்சியகம். | Le Musée de L’Homme

museehommeமனித பரிணாமத்தில் அனைத்து சமூக கூறுகளையும் பல்வேறு காலகட்ட அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படும் ஒரு அருங்காட்சியகமே இது!

பல்லாயிரம் வருடங்களுக்குமுன்னர் மனிதன் பயன்படுத்திய உபகரணங்கள், கல்லில் இறுகிய கடந்த கால பதிவுகள் என்பவற்றை உள்ளடக்கிய இவ் அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஒரு மிகச்சிறந்த களமாக விளங்குகிறது.

1878 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 1937 ஆம் ஆண்டில் மனிதனின் முழு வரலாற்றையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது.

உலகின் பல பாகங்களில் வசிக்கும் வெவ்வேறு இனமக்களின் தோற்றம் எவ்வாறானது அவர்களின் மூதாயையர் யார் என்பதை மிக நுட்பமான ஆராய்வுகளின் மூலம் வகைப்படுத்தியுள்ளனர். வகைப்படுத்தியது மட்டுமல்லாது அந்த அந்த இன மக்கள் எவ்வாறான வாழ்கை வாழ்ந்தார்கள், எப்படியான உபகரணங்களை பயன்படுத்தினார்கள் என்பதையும் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். ( அந்த அந்த காலத்தில் அவர்களின் சனத்தொகை எவ்வளவாக இருந்தது. பின்னர் சனத்தொகையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதெல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.)

museehommeகுரங்கில் இருந்து மாற்றமடையத்தொடங்கிய முதல் மனித தலைமுறையின் உண்மையான எலும்புக்கூடுகள் கூட இங்கு உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்படுகிறது!

மனித பரிமாணம் சான்றுகள் மட்டுமின்றி, பண்டைய மனிதர்கள் பாவித்த சுமார் 5 லட்சம் பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன!

சிறுவர்களின் அறிவியல் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் அறிவு மட்டத்தை உயர்த்தவும் கட்டாயம் செல்ல வேண்டிய தளம்.

உத்தியோக பூர்வ இணையத்தளம் : http://www.museedelhomme.fr/

இருப்பிடம் :


Agrandir le plan

(2303)

Leave a Reply

Top