செம்மறி ஆட்டை உண்ணும் தாவரம் !

ஆடு உண்ணும் தாவரம் இல்லீங்க “ஆட்டை உண்ணும் தாவரம்” தான். அது எப்படி தாவரத்திற்கு வாயா இருக்கு எப்படீங்க ? உங்க ‘மைண்ட் வாய்ஸ்’ எனக்கு கேட்குது, மேல படியுங்க.

image_78787Sheep_ eating plant1

இது பூச்சி உண்ணும் தாவரங்களான வீனஸ் ப்ளை ட்ராப், பிட்ஷர் தாவரங்களை போல அல்ல, ஆனால் இந்த தாவரத்தின் செல்லப் பெயர் `sheep-eating plant’அது மட்டும் இல்லை இதோட நடவடிக்கையை வைத்து தான் இப்படி அழைக்கப்படுது. இந்த தாவரத்தின் பூர்வீகம் சிலி.   புவா சிலன்ஸிஸ் (Puya chilensis ) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த தாவரம் 10 அடிகளுக்கும் மேலாக வளரக்கூடிய புதர் தாவரம்.
sheepeater_8787

முட்கள் செடிகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் இந்த வகை தாவரத்திற்கு நீளமான கொக்கி போன்ற முட்கள் விலங்குகளை பிடிக்க பயன் படுகிறது. செம்மரி ஆடு அல்லது வேறு விலங்குகள், பறவைகள் இந்த புதர் நடுவில் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது. இறக்கும் விலங்குகள் மண்ணோடு மக்கி இந்த தாவரத்திற்கு (உணவாகிறது) உரமாகிறது.sheep_eater_56862

 

(இது வெளிவிடும் பழ வாசனை விலங்குகள், பறவைகளை ஈர்க்கும் என நினைக்கிறேன் )
லண்டனில் உள்ள ராயல் தோட்டகலை கூடத்தில் (the Royal Horticultural Society’s Garden- Wisley) கடந்த 15 வருடங்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. இவ்வளவு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த தாவரம் பூக்க தொடங்கியுள்ளது.

மனிதர்கள் குறிப்பாக குழந்தைகள் இதை நெருங்காத வண்ணம் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

by Kalakumaran (eniyavaikooral)

 

(3340)

2 thoughts on “செம்மறி ஆட்டை உண்ணும் தாவரம் !”

  1. siva says:

    In Tamil same time its very interested topic nice

  2. siva says:

    I want space details and space topic

Leave a Reply

Top