உருவ அளவை மாற்றலும் மறைய வைத்தலும்! – Adobe Flash–Basic 02

இன்று Flash இல் அடிப்படையாகத்தேவைப்படும் இரண்டு விளைவுகளைப்பற்றி பார்க்கப்போகின்றோம்.

பயன்படுத்தப்பட்ட மென்பொருள் : Adobe Flash CS 3 பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் : Micromedia (MX , 2004) & Adobe Flash (CS3,CS4,CS5,CS6)

01. உருவங்களின் அளவை மாற்றுதல்.

உருவங்களை அசைப்பது போன்றே, உருவங்களை பெரிதாக்கும்/சிறிதாக்கும் செயன்முறைகளும் அமைவதால் அதனை விரிவாக பார்க்காமல் அதில் செய்யவேண்டிய மாற்றங்கள் மட்டும் தரப்பட்டுள்ளன. ( புதியவர்கள் முதலாவது ரியூட்டோரியலை பார்க்கவும். ADOBE FLASH- 01)

முதல் இரு படிகளிலும் மாற்றமில்லை.

படி 03 :

3 வது படியில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Free Transform Tool (Q) மூலமாக பெரிது அல்லது சிறிது ஆக்கவும்.

Step 03 : Resize

Step 03 : Resize

அவளவும் தான்,  Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.

02. உருவங்களை மறையவைத்தல் (ALPHA)

முதல் 2 செய்முறையிலும் மாற்றமில்லை.

படி 03 :

3 வது படியில், 10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை Select செய்யவும். அடுத்து F8 அழுத்தி வரும் Menu Box ல் Type பகுதியில் Graphic ல் Click செய்து Ok பன்னவும். (F8 -> Graphic -> Ok)

Step 03 : Graphic

Step 03 : Graphic

இப்போது, Properties Menu ல் புதிதாக சில மாற்றங்களை காண‌முடியும். நாம் மாற்றியமைக்கேற்ப Instance Behavior ; Graphic ஆக மாற்றம் அடைந்திருக்கும்.

Step 03 info

Step 03 info

படி 04 :

இப்போது Color எனும் பகுதியும் காணப்படும். அதற்கு முன்னால் உள்ள‌ None என்பதை Click செய்து வரும் Scroll Box ல் உள்ள Alpha என்பதை Click செய்யவும்.
இப்போது அதன் அருகில் ஒரு box ல் 0 அல்லது 100 என குறிக்கப்பட்டு இருக்கும்.

அதன் அருகில் உள்ள அம்புகுறியினை அழுத்தி எண் பெறுமதியை 0 ஆக்கவும்.

flash-tamil-tutorials-10

0 இருந்து பெறுமதி கூட கூட மறையும் தன்மை குறைவதை காணமுடியும். அவ் எண் பெறுமதிதான் மறையும் தன்மையை தீர்மானிக்கிறது.

அவளவும் தான்,  Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.

சந்தேகங்களை கேட்கவும், புதிய கற்கைக் நெறிகளுக்கும் எம்மோடு இணைந்திருங்கள்!

(1098)

Leave a Reply

Top