அசையும் உருவங்கள் – Adobe Flash – Basic (Tamil Tuts)

Flash மென்பொருளின் அடிப்படை Animation விடையங்களை பற்றி பார்க்க உள்ளோம்.
முதலில் உருவங்களை எப்படி அசைப்பது என்பதை பார்க்கலாம்.

பயன்படுத்தப்பட்ட மென்பொருள் : Adobe Flash CS 3
பயன்படுத்தக்கூடிய மென்பொருட்கள் : Micromedia (MX , 2004) & Adobe Flash (CS3,CS4,CS5,CS6)

இப் பகுதியில் ஒரு வட்டத்தினை எவ்வாறு அசைப்பது என்பதனை பார்ப்போம். இதேபோன்ற செயன்முறை மூலமாக எழுத்து வடிவங்களையும், படங்களையும் அசைக்க முடியும்.

படி 01 :

தேவையான‌ அளவில் Movie ஐ உருவக்கிகொள்ளவும். இதற்கு பின்வரும் படிகளை பின்பற்றவும்.
File -> New (Ctrl+N) -> Properties -> Size தேவையான அளவுகளை அமைக்கவும். இங்கு Frame rate என்பது Movie இன் வேகத்தை குறிப்பதாகும். (CS4 இற்கு முந்தையை பதிப்புக்களில் 12 உம் பிந்தையதில் 24 உம் இருக்கும்.)

Step 01 : New Project

Step 01 : New Project

படி 02 :

Layer 1: Frame 1 இல் Ovel tool (O)
மூலமாக stage இல் ஒரு வட்டத்தை வரையவும்.

Step 02 : drawing circle:

Step 02 : drawing circle:

பின்னர் 10 ஆவது Frame இல் அல்லது தேவையன இடத்தில் F6 இனை அழுத்தி (அல்லது Right Click செய்து 5 ஆவதாக காணப்படும் Insert KeyFrame இனை Select ‌செய்து) KeyFrame இனை உருவக்கவும்.

Step 02b : KeyFrame

Step 02b : KeyFrame

படி 03 :

10 ஆவது Frame ஐ select செய்துவிட்டு stage இல் உள்ள வட்டத்தினை நகர்த்தி வேறு
இடத்தில் வைக்கவும்.

Step 03 : Moving

Step 03 : Moving

படி 04 :

Layer1 ஐ Click செய்யவும். இப்போது அனைத்தும் Select (Highlight) ஆகி இருப்பதை காண‌முடியும். பின்னர் Highlight ஆன பகுதியில் Right Click செய்து முதலாவதாக காண‌ப்படும் Creat Motion Tween ஐ Click பன்னவும்.

Step 04a : Layer Selection

Step 04a : Layer Selection

Step 04b : Create Motion

Step 04b : Create Motion

இப்போது தேவையான அனைத்து செயற்பாடுகளும் முடிவுற்றுவிட்டது. Ctrl + Enter மூலமாக சோதித்து பார்க்கவும்.

மேலதிக சந்தேகங்களை எம்மிடம் கேட்கலாம். புதிய கற்கைகளுக்கு எம்மோடு இணைந்திருங்கள்!

(1910)

Leave a Reply

Top