மங்களான புகைப்படத்தை தெளிவாக மாற்றுவது எப்படி? – Photoshop-tamil 02

மங்கலான புகைப்படம் ஒன்றை எப்படி ஃபோட்டோஷொப் மூலம் இலகுவாக தெளிவான புகைப்படமாக்குவது என்பதை பார்க்கலாம்.

பயன்படுத்திய மென்பொருள் : Adobe Photoshop CS6

உங்கள் மங்களான புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள். ( Ctrl + O அல்லது இரண்டு சொடுக்கு மூலம்.)

Step 01 : Image

Step 01 : Image

உங்கள் புகைப்படத்தை திறந்த பின்னர் அதை ஒரு பிரதி செய்துகொள்ளவும்.
புகைப்பட Layer இல் வலது சொடுகல் செய்து Duplicate layer கொடுக்கவும்.

Step 02 : Duplicate Layer

Step 02 : Duplicate Layer

பிரதி எடுக்கப்பட்ட (Duplicate) layer ஐ தெரிவு செய்துவிட்டு, Image -> Adjustments -> Level.. ஐ சொடுகவும். அல்லது Ctrl + L

Step 03a : Level

Step 03a : Level

இப்போது, அதில் உள்ள பிரிவுகளில் Auto கொடுத்து Ok ஐ அழுத்தவும்.

Step 03b : Level

Step 03b : Level

அடுத்து, Filter -> Others -> High Pass ஐ சொடுகவும்.

Step 4a : High Pass

Step 4a : High Pass

High Pass இல் Radius ஐ புகைப்படத்திற்கு ஏற்ற வாறு மாற்ற வேண்டும். பொதுவாக 3 அனைத்திற்கும் பொருந்தும். தேவைப்படும் பெறுமானத்தை கொடுத்து Ok அழுத்தவும்.

Step 4b : High Pass

Step 4b : High Pass

இப்போது இறுதியாக effects சேர்க்கப்பட்ட layer ஐ (அதாவது Duplicate layer) தெரிவு செய்து, layer style ஐ overlay ஆக மாற்றிக்கொள்ளவும்.

Step 05 : Overlay

Step 05 : Overlay

இப்போது உங்கள் படம் தெளிவாக இருப்பதை காண்பீர்கள்!

Final Result!

Final Result!

மேலதிக சந்தேகங்களுக்கும் புதிய கற்கைகளுக்கும் எம்மோடு இணைந்திருங்கள்!

(2385)

3 thoughts on “மங்களான புகைப்படத்தை தெளிவாக மாற்றுவது எப்படி? – Photoshop-tamil 02”

 1. Kandiah Nimalan says:

  Super..

 2. Abdul Rajack says:

  how v get overlay. I tried right click from background copy but there was no more overlay. let me know from where I can get overlay option.

  1. No need to right click…
   just over the layer (above the eye) | left of opacity option
   change that option normal to overlay…

Leave a Reply

Top