எம்முடன் போட்டி போடும் எறும்புகள்! – எறும்புகள் பற்றிய உண்மைகள்

antsஎம் வீடுகளில் இருக்கும் எமது உணவை உண்டு வாழும் எறும்புகள் பற்றி நாம் யாருமே பெரிதாக சிந்திப்பதில்லை. எம்மை விட அளவில் மிகச்சிறியவையான (கிட்டத்தட்ட  10000 மடங்கு சிறியவை) எறும்புகளைப்பற்றி இன்று பார்ப்போம்.

பூமியில் உள்ள  மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் உள்ள மொத்த மனிதர்களில் எண்ணிக்கைக்கு சமனானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன! இதுவொன்றே எறும்புகள் லேசுப்பட்டவை இல்லை என்பதற்கு சான்று.
எறும்புகள் பற்றிய மேலும் சுவாரஷ்யமான தகவல்களை பார்க்கலாம்…

எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார் 130 மில்லியன் வருடங்கள் ஆகின்றன.

10 000 – 12 000 வகையான எறும்புகள் உலகம் பூராவும் வாழ்கின்றன.

எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன!

Life cycle of ants

Life cycle of ants

எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை : egg, larva, pupa, adult

சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள்வரை உயிர்வாழும். ( பிரத்தானிய ஆய்வுப்படி கறுப்பு பெண் எறும்பு சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என அறியப்பட்டது.)

எறுபுகளுக்கு காதுகள் கிடையாது, நடக்கும்போது எற்படும் அதிர்வுகளை வைத்தே உணருகின்றன.

எறும்புகள் சண்டையிட்டால் ஒரு இறப்பு வரும் வரை சண்டை நடைபெறும்!

எறும்புகளில் செட்டை உள்ள எறும்பு ராணி எறும்பாகும்.

எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் உண்டு. ஒன்று அவைக்காகவும் மற்றையது ஏனைய எறும்புகளுக்ககவும்!

எறும்புகள் பல்வேறு அளவில் இருக்கின்றன. சில எறும்புகளை பூதக்கண்ணாடியினால் மட்டுமே பார்க்க முடியும். அதி வீளை 3 இன்ஞ் அளவுடைய எறும்புகளும் இருக்கின்றன. ( உலகத்திலேயே மிகப்பெரிய எறும்பாக கருதப்படும் எறும்பையே இங்கு காண்கிறீர்கள். )

எறும்புகள் எப்போதும் தனித்து வாழாது! கூட்டம் கூட்டமாகவே வாழும். இக்கூட்டத்தை colony என்பார்கள். ( 2002 ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான ஏரும்புகளைக்கொண்ட சுமார் 5800 கிலோ மீட்டர்கள் நீளமுடைய எறும்புகளின் கொலனி கண்டறியப்பட்டது. இது இத்தாலி – ஸ்பெயின் எல்லையில் அறியப்பட்டது.)

Ants colony

Ants colony

சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியன அவைக்கு ஆண்துணை தேவைப்படுவதில்லை.

சில எறும்புகள் நீந்தக்கூடியவை. பொதுவாக 24 மணி நீரம் நீருக்கடியில் உயிருடன் வாழும் தகுதி உடையவை.

வாடா அமெரிக்காவில் நெருப்பு எறும்புகளால் சுமார் 5 பில்லியன் பெறுமதியான உடமைகள் சேதமாகின்றன.

எறும்புகள் தமக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியன. மனிதரும் எறும்பும் மட்டும் தான் விவசாயம் செய்கின்றன. ஆனால் மனிதன் விவயாயம் செய்ய முதல் எறும்புகள் செய்துள்ளன.

For More, Join with us!

(2286)

2 thoughts on “எம்முடன் போட்டி போடும் எறும்புகள்! – எறும்புகள் பற்றிய உண்மைகள்”

  1. Sathish Muthu Kumar says:

    like

  2. Ravi Sankar says:

    thakavulukk nantri

Leave a Reply

Top