சுவரை அலங்கரிக்க எவ்வளவு நேரமாகும்? – தமிழ் புதிர்கள்!

painters tamil puzzlesகபிலன் தனது வீட்டு சுவரிற்கு வர்ண அலங்காரம் செய்ய நினைத்தான். வர்ண அலங்காரம் செய்வதற்கென தேர்ச்சி பெற்ற அஷோக், ராம், கஜன் ஆகியோரை அவனுக்கு நன்றாக தெரியும். மூவரினதும் அல்ங்கார நுட்பங்கள் தனது சுவரில் இடம்பெறவேண்டும் என்பதை அவன் விரும்பினான். அவர்களிடம் தனித்தனியாகச்சென்று தனது விருப்பம் தொடர்பாக தெரிவித்தான்.

அதன் படி,
அஷோக் அந்த சுவரை முழுமையாக அலங்கரிக்க 1 மணி நேரம் எடுத்துக்கொள்வான் என்றான்.
ராம் தனக்கு அந்த வேலையை முடிக்க 3 மணி நேரம் தேவை என்றான்.
கஜனோ அவ் வேலையை முடிக்க 6 மணி நேரம் தேவை என்றான்.

கபிலன் மூவரையும் ஒன்றாக வேலையில் ஈடுபடுத்த விரும்பினான். ஆனால் அவனால், அவர்கள் மூவரும் இணைந்து சுவரை அலங்கரித்து முடிக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை கணிப்பிட முடியவில்லை.

கபிலனுக்கு உதவுங்கள் பார்க்கலாம். :)

முயற்சியின் பின்னர் கீழுள்ள தீர்வை சரி பாருங்கள்.

Like அல்லது Tweet பண்ணுவதன் மூலம் விடுவிக்கலாம். அல்லது, எமது Facebook பக்கத்தில் கருத்துப்பகுதியில் விடையை எதிர் பாருங்கள் நன்றி.

தீர்வு!

[wp-like-locker]

ஒரு மணி நேரத்தில் மூவரும் செய்யக்கூடிய வேலையின் திறன் :
1/1 + 1/3 + 1/6 ஆகும். ஆகவே, 1/1 + 1/3 + 1/6 = 9/6 = 3/2 அதாவது ஒரு மணி நேரத்தில் 1 1/2 (ஒன்றரை) சுவரை அலங்கரிப்பார்கள்.

எனவே, ஒரு சுவரை அலங்கரிக்க, 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள்!

[/wp-like-locker]

[twitterlocker]

ஒரு மணி நேரத்தில் மூவரும் செய்யக்கூடிய வேலையின் திறன் :
1/1 + 1/3 + 1/6 ஆகும். ஆகவே, 1/1 + 1/3 + 1/6 = 9/6 = 3/2 அதாவது ஒரு மணி நேரத்தில் 1 1/2 (ஒன்றரை) சுவரை அலங்கரிப்பார்கள்.

எனவே, ஒரு சுவரை அலங்கரிக்க, 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்வார்கள்!

[/twitterlocker]

(3004)

6 thoughts on “சுவரை அலங்கரிக்க எவ்வளவு நேரமாகும்? – தமிழ் புதிர்கள்!”

 1. kanagaraj says:

  3/2 hours

 2. janujan says:

  36 minutes

 3. janujan says:

  good 2/3 hours

 4. Magentiran Nawamani says:

  36 : 18 : 6.

Leave a Reply

Top