சா(ர்)ட் மாதா! Chartres – வரலாறும் சுற்றுலாவும்.

Chartres-Cathedralஇது ஃப்ரான்ஸில் உள்ள மிக முக்கியமான தேவாலயங்களில் ஒன்றாகும். 1020 ஆம் ஆண்டளவில் பாதிரியார் ஃபுல்பேர்ட் (Fullbert) என்பவரின் கோரிக்கைக்கு இணங்கி கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1030, 1134, 1194 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிபத்துக்களின் காரணமாக தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. 1194 ஆம் ஆண்டின் பின்னர் சுமார் 26 வருடங்கள் திருத்த வேலைகள் இடம் பெற்றன. 1210 ஆம் ஆண்டில் இருந்து இத்திருத்தலம் “எங்கள் மாதா” எனும் பொருட்பட “Our lady of Chartres” என்று அழைக்கப்படுகிறது.

1260 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17 ஆம் திகதி (17/10/1260) லூயி மன்னர் வம்சத்தவராலும் போப் 4ஆம் அலெக்ஷான்டராலும் முதல் முதலாக புனித அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ் தேவாலயம் மையப்பகுதி மாகாணமான Centre மாகாணத்தில் அமைந்துள்ளது.

12-13 ஆம் நூற்றாண்டுகளில் மெதுவாக வட-மத்திய பிரான்ஸில் வளர்ச்சியடைந்த “கொதிக் – Gothic)” கலை வடிவங்களில் அமைந்த மிகப்பிரமாண்டமான தேவாலயமானது அழகிய கண்ணாடி வேலைப்பாடுகளையும், 3889 சிற்பங்களையும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. சமயக்கலவரங்கள் அற்ற அந்த கால கட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கொதிக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இத்தேவாலய கட்டிட வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் பழைய கட்டுமான வேலைப்பாடுகளின் சிறப்பிற்கு இன்றுவரை சான்றாகவும் நினைவுச்சின்னமாகவும் திகழ்கிறது இந்த தேவாலயம்.

நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலத்திற்காக பல நாடுகளில் இருந்தும் மக்கள் இத்தேவாலயத்தை தரிசிக்கின்றார்கள்.
ஆண்டு தோறும் தமிழ் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு ஒரு நாள் தமிழில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.!

புகைப்படங்கள்!

இருப்பிட வரைபடம்!


View Larger Map

(999)

Leave a Reply

Top