தவளையின் உடலில் இருந்து…தோன்றிய முதல் மின் கலன்

first_battery12454

மீச்சிறு தூண்டுதல் பல பெரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகிவிடுகிறது.

1800 ல் இத்தாலியன் இயற்பியலாளர் அலெஸாண்ரோ வோல்டா முதல் மின்கலனை (BATTERY) கண்டுபிடித்தார்.

<<அந்த முதல் பேட்டரி இதுதான்

இந்த பேட்டரி பார்பதற்கு நிறுத்தி வைக்கப்பட்ட குழாய்துண்டு போல் காட்சி அளிக்கும். சம அளவில் இருக்கும் வட்ட வடிவ தாமிர(copper) மற்றும் துத்தநாக(zinc) தகடுகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இவற்றின் இடை இடையே உப்புத்தண்ணீரால் தோய்க்கப்பட்ட காகிதங்கள் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு உலோகத்தகடும் கெட்டியான உலோக கம்பியால் இணைக்கப்பட்டு இருக்கும்.

volta_1800

இவர் இந்த பேட்டரி கண்டு பிடிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது இன்னொரு நிகழ்வு.

லூகி கால்வனியின் (Luigi Galvani) பரிசோதனை கூடத்தில், தாமிர

கம்பியில் தொங்கவிடப்பட்ட ஒரு இறந்த தவளையின் காலருகில் கொண்டு செல்லப்பட்ட மெல்லிய இரும்பு தகடு அதன் காலில் அசைவை ஏற்படுத்தியது எப்படி ? என்ற சிந்தனையே வோல்ட்டாவிற்கு பேட்டரியை கண்டுபிடிக்க தூண்டுதலாக இருந்து இருக்கிறது.

இதே போல வோல்டா ஏற்படுத்திய முதல் மின் தூண்டல் பின்னாலில் 1821 ல் மைகேல் பாரடேவிற்கு மின்மோட்டாரை கண்டுபிடிக்க ஏதுவானது.

தொடர்புடைய பதிவு பாக்தாத் பேட்டரி

கொசுறு தகவல்

1951 ல் இடாஹோவில் ஆரம்பிக்க பட்ட நியூக்ளியர் அணு உலையில் கிடைத்த சக்தி 4 பல்புகளை மட்டுமே எறிய வைக்க முடிந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து கிடைக்கும் சக்தி உலக அளவில் 5 சதவீதமாகும்.

===============================

By Kalakumaran – eniyavaikooral

(1794)

Leave a Reply

Top