சிறிய மலையாக‌ மாறி வினோத திருட்டு முயற்சி – வினோத சம்பவங்கள்.

இன்று ஒரு வினோத திருட்டு சம்பவத்தில் மாட்டுக்கொண்ட நபரைப்பற்றிப்பார்க்கப்போகின்றோம்.

அமெரிக்காவில் “Rice Northwest Museum of Rocks and Minerals” என்ற பழமை வாய்ந்த கற்களும் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களும் உள்ள அருங்காட்சியகத்தில் திடீரென தூசுப்படிவுகள் அதிகமாக அரம்பித்தன. சந்தேகமடைந்த அருங்காட்சியக அலுவலர்கள் காவலர்களிடம் முறையிட்டனர்.

Gregory Liascos

Gregory Liascos

காவலர்களின் தேடலின் பின்னர், அருங்காட்சியகத்தின் பின்புற கழிவறைக்கு அருகிலுள்ள மின் தூக்கியில் பின்புறமாக துவாரம் துழைக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. ஆனால், துவாரத்தை துளைத்தவர்யார் என்பதற்கான எந்த அடையாலமும் கிடைக்கவில்லை. பாதுகாப்பிற்கு பொருத்தப்பட்ட security camera களில் கூட எவரும் சிக்கவில்லை.

தேடுதலில் இருந்த போது திடீரென காவலரின் மோப்ப நாய் ஒரு சிறிய தாவர குன்றை விறாண்டி கடிக்கத்தொடங்கியது. உடனே காவலர்கள் அதை பரிசோதிக்க முட்பட அங்கே ஒரு நபர்!

ஆம், அருங்காட்சியகத்தில் திருடுவதற்காக தன்னை ஒரு சிறிய தாவரக்குன்றாக அலங்கரித்துகொண்டு திருட ஆரம்பித்துள்ளார் அவர்.

36 வயது நிரம்பிய அவர் (Gregory Liascos) தெரிவிக்கையில், தனது பிள்ளைகளுக்கு வாங்கிய “Halloween” நாளுக்கான ஆடைகளே தனக்கு இப்படிப்பட்ட ஒரு யோசனையை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.

இது 2011 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம். வினோத திருட்டு வழக்காக பதிவானதால் இங்கு தரப்பட்டுள்ளது.

(2087)

Leave a Reply

Top