விமான நிலையத்தை வீடாக்கிய அகதி! – Sir, Alfred Mehran | Video

mehran-karimi-nasseri tamil2Mehran Karimi Nasseri (மெஹ்ரன் கர்மி நஷாரி) என்ற வினோத நபரை பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்!

Sir, Alfred Mehran என்றழைக்க‌ப்படும் இவ் நபர், 1988 ஆம் ஆண்டில் இருந்து விமான நிலையத்தில் வசித்துவருகிறார்!
ஆம், சொந்த நாட்டில் நடைபெற்ற சித்திரவதைகளின் காரணமாக ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்த நஷாரி பல ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்துகோரினார். எனினும் அவரின் துரதிஷ்டம் எந்த நாடும் அவரை அகதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இறுதியாக 1988 இல் இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து கோருவதற்காக‌ ஃப்ரான்ஸ் சார்ல் து கோல் (Charles de Gaulle) விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் ஹீத்துரு (Heathrow) விமான நிலையத்திற்கு புறப்பட காத்திருந்தார்.
காத்திருந்த வேளையில், திருடர்களால் அவரிடம் இருந்த பை திருடப்பட்டது. எனினும், விமானம்மூலமாக Heathrow வை சென்றடைந்தார்.
ஆனால், எந்த விதமான ஆவணங்களும் இல்லாததால் இங்கிலாந்து பொலிஸார் அவரை ஏற்க மறுத்து மறுபடியும் ஃப்ரான்ஸிற்கு அனுப்பிவைத்தனர். மீழ வந்தவரை ஃப்ரான்ஸ் பொலிஸார் விசாரித்த போது, அவர் ஃப்ரான்ஸில் வசித்தவர் என்பதை நிரூபிப்பதற்க்கு நஷாரியிடம் எந்த வித பத்திரங்களும் இருந்திருக்கவில்லை. அதனால், காத்திருக்கும் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

எங்கோ ஏற்பட்ட தவறு காரணமாக, அவரது விசாரனை அற்றுப்போனது!
அதை தொடர்ந்து நஷாரி சார்ல் து கோல் விமான நிலையத்திலேயே தங்கிவிட்டார்! விமான நிலையத்தின் சிற்றுண்டி மற்றும் புத்தக சாலைகளில் சுற்றிவரும் இவர் எவரிடமும் பேசுவதில்லை. பார்ப்பதற்கு பயணிகள் போலவே காட்சிதரும் இவரை யாரும் கண்டுகொள்வதும் இல்லை!

சுமார் 25 வருடங்களாக எந்த வித தீர்மானமும் இல்லாமல், விமான நிலையத்தில் வாழ்ந்துவரும் நஷாரியை அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது!

இவரின் வாழ்க்கையை பகுதியாக கொண்டு வெளிவந்த படமே The Terminal (2004).

(1259)

Leave a Reply

Top