ஃப்ரான்ஸ் பதிவுத்திருமண நடைமுறை. | France Laws – Tamil

france ஃப்ரான்ஸில் இருவர் திருமணம் செய்யவேண்டும் என்றால் எவ்வாறான படிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை இவ் ஆக்கத்தில் பார்க்கலாம்.

ஃப்ரான்ஸில் பதிவுத்திருமணத்திற்கான பதிவுகள் மாநகர சபை (Maire) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு நகரத்திலும் இருக்கும் இச்சபைகள் தமது நகரத்தின் போக்கிற்கு ஏற்ப வெவ்வேறுபட்ட பத்திரங்களை திருமணம் செய்ய இருப்போரிடம் பெற்றுக்கொள்ளும். நாம் இங்கு பொதுவாக தேவைப்படும் ஆவணங்களை பார்க்கலாம்.

திருமணம் செய்பவர்கள் இருவரும் ஃப்ரான்ஸ் நாட்டு பிரஜாவுரிமை உடையவர்கள் என்றால் :

1) இருவரதும் பிரஜாவுரிமை அட்டைகள் (Nationalité -Nationality)பெற்றுக்கொள்ளப்படும்.

2) இருவரதும் பிறப்பட்தாட்சி பத்திரங்கள் ( Acte de naissance – Birth certificate) பெற்றுக்கொள்ளப்படும்.

3) சாட்சியாளர்களின் விபரங்களை கேட்டு ஒரு விண்ணப்ப பத்திரம் கொடுக்கப்படும். ( வேலைவிபரம், இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை பிரதிகள் தேவைப்படும்.)
maire ஆல் கேட்கப்படும் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பின்னர், 14 தொடக்கம் 21 நாட்களுக்கு (இவ் நாள் இடைவெளி maire இக்கு maire மாறுபடலாம்.) maire இன் அறிவித்தல் பலகையில் திருமணம் செய்ய இருப்போரின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். அதற்குள் திருமணம் சட்டவிரோதமானது என யாரும் புகார் செய்யாவிடின் திருமணத்திற்கான நாள் சம்பந்த பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்மாணிக்கப்படும்.

register marriage in france tamilஒருவர் ஃப்ரான்ஸ் நாட்டு பிரஜாவுரிமை உடையவர். மற்றையவர் அகதி அந்தஸ்துள்ள (Réfugiés-Refugee) அல்லது குடியேற்ற விசா(Immigrant) உள்ள வேறு நாட்டு பிரஜாவுரிமை உடையவராக இருப்பின். :

1) இருவரதும் பிரஜாவுரிமை அட்டைகள் / அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளப்படும்.

2) இருவரதும் பிறப்பட்சாத்தி பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்படும். ( வேறு மொழி பிறப்பத்தாட்சி பத்திரம் என்றால் அனுமதிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் ஃப்ரெஞ்சு மொழியில் மாற்றுதல் வேண்டும். பிறப்பத்தாட்சி பத்திரம் 3 மாதங்களுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்.)
வேறு நாட்டு பிரஜாவுரிமை உடையவர் 18 வயதின் பின்னர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர் எனின், அவர் தனது நாட்டு வெளி நாட்டு தூதுவரகத்தினூடாக “ஏற்கனவே திருமணம் ஆகாதவர் (certificat célibataire – unmarried certificate)” என்ற சான்றிதலை பெறுதல் வேண்டும்.
சில மாநகர சபைகள் நாட்டில் வசிப்பதற்கான 3 அத்தாட்சிகளை கேட்கும். ( உதாரணம் : வங்கி கணக்கு, தொலைபேசி பாவணை விபரம், ஏனைய அரச சார் பதிவுகள்.)

3) சாட்சியாளர்களின் விபரங்களை கேட்டு ஒரு விண்ணப்ப பத்திரம் கொடுக்கப்படும். ( வேலைவிபரம், இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை பிரதிகள் தேவைப்படும்.)
maire ஆல் கேட்கப்படும் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பின்னர், 14 தொடக்கம் 21 நாட்களுக்கு (இவ் நாள் இடைவெளி maire இக்கு maire மாறுபடலாம்.) maire இன் அறிவித்தல் பலகையில் திருமணம் செய்ய இருப்போரின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். அதற்குள் திருமணம் சட்டவிரோதமானது என யாரும் புகார் செய்யாவிடின் திருமணத்திற்கான நாள் சம்பந்த பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்மாணிக்கப்படும்.

eheringeஒருவர் அகதி அந்தஸ்துள்ள (Réfugiés-Refugee) அல்லது குடியேற்ற விசா(Immigrant) உள்ள வேறு நாட்டு பிரஜாவுரிமை உடையவராகவும் மற்றையவர் அகதி அந்தஸ்து கோரியுள்ள ( Asile – Asylum) கோரியுள்ளவர் என்றால். :

1) நிரந்தர வதிவிட அனுமதி இருப்பவரின் அடையாள அட்டையும். தற்காலிக வதிவிட அனுமதி இருப்பவரிடம் இறுதியாக அரச அனுமதியுடைய அடையாள பத்திரமும் பெற்றுக்கொள்ளப்படும்.

2) இருவரதும் பிறப்பட்சாத்தி பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்படும். ( வேறு மொழி பிறப்பத்தாட்சி பத்திரம் என்றால் அனுமதிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் ஃப்ரெஞ்சு மொழியில் மாற்றுதல் வேண்டும். பிறப்பத்தாட்சி பத்திரம் 3 மாதங்களுக்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்.)
வேறு நாட்டு பிரஜாவுரிமை உடையவர் 18 வயதின் பின்னர் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறியவர் எனின், அவர் தனது நாட்டு வெளி நாட்டு தூதுவரகத்தினூடாக “ஏற்கனவே திருமணம் ஆகாதவர் (certificat célibataire – unmarried certificate)” என்ற சான்றிதலை பெறுதல் வேண்டும்.
அகதி அந்தஸ்த்து அங்கீகரிக்கப்பட்டவர் எனின், ஃப்ரான்ஸில் அகதிகளுக்கு பொறுப்பான Ofpra விடம் இருந்து “திருமணமாகாதவர்” என்பதற்கான அத்தாட்சியை பெறுதல் வேண்டும். ( பிறப்பத்தாட்சி பத்திரமும் இங்கேயே பெறப்பட வேண்டும்.)
சில மாநகர சபைகள் நாட்டில் வசிப்பதற்கான 3 அத்தாட்சிகளை கேட்கும். ( உதாரணம் : வங்கி கணக்கு, தொலைபேசி பாவணை விபரம், ஏனைய அரச சார் பதிவுகள்.)

3) சாட்சியாளர்களின் விபரங்களை கேட்டு ஒரு விண்ணப்ப பத்திரம் கொடுக்கப்படும். ( வேலைவிபரம், இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை பிரதிகள் தேவைப்படும்.)
maire ஆல் கேட்கப்படும் ஆவணங்கள் கொடுக்கப்பட்ட பின்னர், 14 தொடக்கம் 21 நாட்களுக்கு (இவ் நாள் இடைவெளி maire இக்கு maire மாறுபடலாம்.) maire இன் அறிவித்தல் பலகையில் திருமணம் செய்ய இருப்போரின் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும். அதற்குள் திருமணம் சட்டவிரோதமானது என யாரும் புகார் செய்யாவிடின் திருமணத்திற்கான நாள் சம்பந்த பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்மாணிக்கப்படும்.

forced-marriage-56101திருமணத்தின்பின்னரான உடனடி விவாகரத்துக்களை தவிர்ப்பதற்காகவும், கட்டாய திருமணங்கள் / சட்டவிரோத திருமணங்களை தவிர்ப்பதற்காக, இப்போது திருமணம் ஆக இருக்கும் இருவரிடமும் அவர்களின் மன ஒற்றுமை தொடர்பாக அறிந்துகொள்வதற்காக. Maire மூலம் தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டு மன ஒற்றுமை தீர்மாணிக்கப்படுகிறது, ஒற்றுமையை பொறுத்து விரைவாக திருமண ஏற்பாடுகள் செய்யப்படும்.

பதிவுத்திருமணம் மாநகராட்சி மன்ற தலைவர் முன்னிலையிலான உறுதி மொழியுடன் மேற்கொள்ளப்படும்.
( ஃப்ரெஞ்சு மொழி தெரியாதவர் எனின், மொழி பெயர்ப்பாளர்களை ஒழுங்கு செய்ய சில மாநகராட்சிகள் அனுமதிக்கின்றன.)

(996)

Leave a Reply

Top